தமிழக இஸ்லாமிய அரசியல் கட்சி தலைவர்கள் முதல்வருடன் சந்திப்பு!

சென்னை (10 ஜன 2020): குடியுரிமை சட்டம் உள்ளிட்ட மத்திய அரசின் சட்டங்களை தமிழகத்தில் அமல்படுத்தக் கூடாது என்று கோரிக்கையுடன் தமிழக இஸ்லாமிய அரசியல் கட்சி பிரமுகர்கள் முதல்வர் எடப்பாடியை சந்தித்துள்ளனர்.

குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் NRC & NPR போன்றவற்றை மத்திய அரசு கொண்டு வந்துள்ள நிலையில் இதனை தமிழகத்தில் அமல்படுத்த மாட்டோம் என முதல்வர் அறிவிப்பு வெளியிட வேண்டும் என்பதை வலியுறுத்தி அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் சார்பில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்தனர்.

இதன் பின்பு கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தபோது பேசிய மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, “முதல்வரை சந்தித்து இது முஸ்லிம்களுக்கான பிரச்சனை மட்டும் அல்ல ஒட்டு மொத்த மக்களுக்கான பிரச்சனை என்பதை ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம். இதுகுறித்து அதிகாரிகளுடன் ஆலோசித்து முடிவெடுப்பதாக முதல்வர் உறுதி அளித்துள்ளார்” என்று ஜவாஹிருல்லா தெரிவித்தார்.

அப்போது கூட்டமைப்பின் தலைவர் மௌலானா காஜா மொய்தீன் ஹஜ்ரத்,மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலாளர் ப.அப்துல் சமது, எஸ்டிபிஐ கட்சி தலைவர் நெல்லை முபாரக், கூட்டமைப்பின் ஓருங்கிணைப்பாளர்கள் மௌலானா மன்சூர் காஷிபி,பஷீர் அஹமத்,முஸ்லீம் லீக் சட்டமன்ற உறுப்பினர் அபுபக்கர்,MLA,, முன்னாள் அதிமுக எம்பி அன்வர் ராஜா, பாப்புலர் ஃப்ரெண்ட் தமிழக தலைவர் முஹம்மது இஸ்மாயில் மற்றும் கூட்டமைப்பில் உள்ள இஸ்லாமிய அமைப்பு மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் உடனிருந்தனர்.

ஹாட் நியூஸ்:

ஐபிஎல் போட்டியில் சென்னை வெற்றிபெற பாஜகவே காரணம் – புழுதியை கிளப்பும் அண்ணாமலை!

சென்னை (30 மே 2023): ஐபிஎல் போட்டியின் இறுதிப்போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணமே பாஜக தான் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி...

பாடதிட்டங்களில் உள்ள நச்சுக் கருத்துகள் அகற்றப்படும் – கர்நாடக முதல்வர் சித்தராமையா திட்டவட்டம்!

பெங்களூரு (30 மே 2023): கர்நாடகாவின் நல்லிணக்கம் மற்றும் மதச்சார்பற்ற பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை, வெறுப்பு அரசியலை பொறுத்துக்கொள்ள முடியாது என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்தார். தனது இல்ல அலுவலகமான...

அபுதாபியில் திறக்கப்பட்டுள்ள புதிய தீம் பார்க் !

அபுதாபி (25 மே 2023): அபுதாபியில் புதிய தீம் பார்க் 'சீ வேல்ட் அபுதாபி' நேற்று முன் தினம் திறக்கப்பட்டது. பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தும் மிகப்பெரிய தீம் பார்க் நேற்று முன் தினம் தொடங்கப்பட்டது...