கொரோனா வைரஸ் குறித்து சீனாவிலிருந்து வந்த தமிழக வாலிபர் கூறுவது இதுதான்!

சென்னை (31 ஜன 2020): உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் ஒருபுறமிருக்க அதுகுறித்த வதந்திகளும் பரவி வருகின்றன.

சமீபத்தில் சீனாவிலிருந்து தமிழகம் திரும்பிய 78 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருக்கிறதா? என அவர்களை தனிக் கட்டுப்பாட்டில் வைத்து கண்காணித்து வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஈடன் கார்டன் பகுதியை சேர்ந்த சந்திரசேகரன் என்ற மாணவர் சீனாவில் செஜியாங்க் நகரில் உள்ள நிங்போ பல்கலைகழகத்தில் நான்காம் ஆண்டு மருத்துவம் படித்து வருகிறார்.

கொரோனா வைரஸ் பரவி வருவதால், வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் அவரவர் நாடுகளுக்கு திரும்ப சீன அரசு உத்தரவிட்டதால் ஜனவரி 26ஆம் தேதி சென்னை வந்த மாணவர் சந்திரசேகரன், மருத்துவ பரிசோதனைக்கு பின் சொந்த ஊரான ஓசூருக்கு வந்துள்ளார்.

ஊருக்கு திரும்பிய சந்திரசேகரன், தொடர்ந்து ஓசூர் அரசு மருத்துவர்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த சீன அரசும் தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், சமூக வலைத்தளங்களில் வரும் வதந்திகளை நம்பவேண்டாம் எனவும் சந்திரசேகரன் குறிப்பிட்டார்.

இந்த வைரஸ் காரணமாக புதிதாக 1,982 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சீன அரசாங்கம் தெரிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பு நேற்று கொடிய கொரோனா வைரஸ் தொடர்பாக ஒரு சர்வதேச அவசர நிலையை அறிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது

ஹாட் நியூஸ்:

ராமர் இந்துக்களின் கடவுள் அல்ல – முன்னாள் முதல்வர் பரபரப்பு கருத்து!

ஜம்மு (24 மார்ச் 2023): ராமர் இந்துக்களின் கடவுள் அல்ல என்று ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசிய காங்கிரஸ் தலைவருமான டாக்டர். பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார். மேலும் ஆட்சியில் நீடிக்கவே ராமரின் பெயரை...

கத்தார் தோஹாவில் குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து!

தோஹா (23 மார்ச் 2023): கத்தார் தோஹா அல் மன்சூராவில் ஒரு குடியிருப்பு கட்டிடம் பகுதி இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று காலை 8.18 மணியளவில் மன்சூரா பி ரிங் சாலையில்...

காலியாகும் பாஜக கூடாரம் – தனிமையில் அண்ணாமலை!

சென்னை (24 மார்ச் 2023): அண்ணாமலை தலைமை மீதான அதிருப்தியில் பாஜகவில் இருந்து 100க்கும் மேற்பட்ட பெண்கள் அதிமுகவில் இணைந்தனர். ஏற்கனவே 13 நிர்வாகிகள் பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த பிறகு, செங்கல்பட்டு...