கத்தார் வழியாக சவூதி செல்லும் இந்தியர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்!

Share this News:

தோஹா (04 ஆக 2021): தற்போது சவூதி அரேபியாவிற்கு செல்வோர் நேரடியாக செல்லமுடியாத நிலை உள்ளது.

எனவே சவூதி அரேபியா பயணத் தடை செய்யாத மூன்றாவது நாட்டில் 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருந்த பின்னரே சவூதி செல்ல முடியும்.

இந்நிலையில் தற்போது இந்தியர்கள் சவூதி செல்ல வழித்தடமாக கத்தாரை தேர்ந்தெடுக்கின்றனர். அதேவேளை கத்தார் வழியாக வருபவர்கள் கத்தார் மற்றும் சவுதி அங்கிகரித்த இரண்டு டோஸ் தடுப்பூசி பெற்றிருக்க வேண்டும்.

மேலும் கத்தாரில் தங்குவதற்கு ஏஜெண்டுகள் நீண்ட கால விசா அளிக்கின்றனரா? என்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும் இந்தியர்கள் கத்தாரை தேர்ந்தெடுக்க இன்னொரு கரணம் சவுதி அரேபியா மற்றும் கத்தார், ஒரே நிறுவனங்களின் கோவிட் தடுப்பூசிகளையே அங்கிகரிக்கின்றன என்பதாகும்..

கத்தார் வழியாக சவுதி அரேபியாவுக்குச் செல்லும் செலவு ரூ .1.5 லட்சத்துக்கு மேல் ஆவதாக கூறப்படுகிறது. ஆனால் விசாகாலம் அதிகரிக்கும்பட்சத்தில் தொகை அதிகரிக்கலாம்.


Share this News:

Leave a Reply