இது இஸ்லாமியர்களுக்கு மட்டுமான போராட்டம் அல்ல – சென்னை ஷஹீன் பாக்கில் மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேரன்!

Share this News:

சென்னை (17 பிப் 2020): நாட்டில் நடக்கும் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம் இஸ்லாமியர்களுக்கு மட்டுமான போராட்டம் அல்ல என்று மகாத்மா காந்தியின் பேரன் மகன் துசார் காந்தி தெரிவித்தார்.

சென்னை வண்ணாரப்பேட்டை ஷஹீன் பாக் போராட்டக் களத்திற்கு வருகை புரிந்திருந்த துசார் காந்தி, போராட்டம் செய்யும் மக்களிடையே பேசும்போது, குடியுரிமை சட்டத்தின் மூலம் இந்திய மக்களின் ஒற்றுமையை எவ்வளவு நுட்பமாகப் பிரிக்கின்றனர் என்பதை பாருங்கள்? நாட்டில் நடந்து வரும் குடியுரிமை திருத்தம் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தைக் கூட இந்து மக்களுக்கு எதிரான இஸ்லாமியர்களின் போராட்டம் என்ற கோட்பாட்டில் சித்தரித்து வருகின்றனர். என்றார்.

குடியுரிமை திருத்தம் சட்டம் அதிகாரபூர்வமாக மதத்தின் பெயரால் பாகுபாடை உறுதிபடுத்துகிறது. இதனால் தேசிய மக்கள் பதிவேடு,தேசிய குடிமக்கள் பதிவேடு போன்ற செயல்முறைகள் உண்மையான ஆபத்தாக அமைந்துவிடும் என்றார்.

குடியுரிமை சட்டம் இஸ்லாமியர்களுக்கானது மட்டுமல்ல என்று கூறிய துசார் காந்தி, கட்டுக்கடங்காத வெறுப்புகள் சமூகத்திற்குள் உருவாகுவதை நினைத்து கவலை கொண்டார். இது ஒவ்வொரு குடிமக்களின் அடிப்படை போராட்டம் என்று துசார் காந்தி தெரிவித்தார்.

தான் இந்திய நாட்டின் குடிமகன் என்பதை நிரூபிக்க ஒவ்வொரு மக்களும் அரசு அதிகாரிகள் பின்பு ஓட வேண்டும். ஒவ்வொரு அரசு அதிகாரியையும் திருப்தி படுத்த வேண்டும். யோசித்து பாருங்கள்……. இந்த செயல்முறையால் யார் பாதிக்கப் படுவார்கள்? பணக்கார்களா? இல்லை கிராமப்புறத்தில் வாழும் ஏழை மக்களும், படிக்காத பாமர மக்களும் தான்? எனவே, குடியுரிமை திருத்தம் சட்டத்திற்கான போராட்டத்தை கிராம புறங்களில் கொண்டு செல்ல வேண்டும் என்றும் துசார் காந்தி தெரிவித்தார்.

VIDEO


Share this News:

Leave a Reply