திருச்சி பாஜக நிர்வாகி கொலை வழக்கில் திடீர் திருப்பம்!

திருச்சி (30 ஜன 2020): திருச்சி பாஜக நிர்வாகி கொலை வழக்கின் திடீர் திருப்பமாக ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருச்சிராப்பள்ளி மாவட்டம் பாலக்கரை பகுதி பாஜக மண்டலச் செயலாளராக இருந்தவர் விஜய ரகு. இவர் திருச்சி காந்தி மார்க்கெட்டில் வாகன நுழைவுக் கட்டணம் வசூலிக்கும் பணியை செய்து வந்தார்.

இந்நிலையில் கடந்த (27-ம் தேதி) காந்தி மார்க்கெட் வாசலில் ஒரு கும்பல் விஜய ரகுவை வெட்டிக் கொலை செய்தது. அக்கம்பக்கத்தினர் சுதாரிப்பதற்குள் அந்தக் கும்பல் தப்பிவிட்டது. அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர். இந்தக் கொலை தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி மிட்டாய் பாபு என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் .மிட்டாய் பாபு தவிர மேலும் ஹரிபிரசாத், 20, சுடர் வேந்தன் 19, சச்சின், 19, முகமது யாசர், 19 ஆகிய நான்கு பேரையும் கைது செய்த போலீசார்  போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர். இவர்கள் திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு,  பின்னர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த கொலையின் பின்னணியில் மிட்டாய் பாபுவுக்கும், விஜய ரகுவுகும் இடையே சொந்த விவகாரம் காரணமாக இருப்பதாக தெரிகிறது.

ஹாட் நியூஸ்: