தேமுதிக தலைவர் விஜய்காந்துக்கு கொரோனா தொற்று!

320

சென்னை (24 செப் 2020): தேமுதிக தலைவர் விஜய்காந்த் கொரோனா அறிகுறிகளுடன் சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனும்திக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், “விஜயகாந்த் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக மியாட் மருத்துவமனைக்குச் செல்வது வழக்கம். அந்த வகையில் சென்றபோது, அவருக்கு லேசான கொரோனா அறிகுறி இருப்பது தென்பட்டது. அது உடனடியாக சரிசெய்யப்பட்டது. தற்போது விஜயகாந்த் நலமுடன் உள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைப் படிச்சீங்களா?:  சாலையில் உலா வரும் மாடுகள் - விபத்தில் சிக்கும் வாகனங்கள்

இந்நிலையில் விஜய்காந்த் விரைவில் குணமடைய வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.