கொரோனா பாதிப்பில் கோவை இரண்டாம் இடம் வகிக்கிறதே ஒருவேளை அதுதான் காரணமா?

Share this News:

சென்னை (10 ஏப் 2020): கொரோனா பாதிப்பில் தமிழகம் இந்திய அளவில் இரண்டாம் இடம் வகித்தாலும் தமிழக அளவில் சென்னைக்கு அடுத்தபடியாக கோவை இரண்டம் இடம் வகிக்கிறது.

உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை 6412 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 199 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் மட்டும் 834 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். அதில் சென்னை முதலிடம் வகிக்கிறது. கோவை இரண்டாம் இடம் வகிக்கிறது.

இந்நிலையில் பலரும் கொரோனா பாதிப்பிற்கு டெல்லி தப்லீக் ஜமாஅத் சார்பில் கூடிய ஆலோசனைக் கூட்டமே என விமர்சித்து வருகின்றனர். ஒரு தரப்பார் முஸ்லிம்களை குறி வைத்து பல போலி வீடியோக்களை பதிவிட்டு விமர்சிக்கின்றனர். இதனை பாஜக தேசிய செயலர் எச்.ராஜாவும் ஆமோதித்து பதிவிட்டு இருந்தார். இது ஒருபுறம் இருக்க, போலி வீடியோக்களை பரப்புபவர்களுக்கு எதிராகவும், முஸ்லிம்கள் மீது அவதூறு பரப்புபவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி ஜமியத்துல் இஸ்லாமி ஹிந்து அமைப்பு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு அளிக்கப் பட்டுள்ளது.

இச்சூழலில், எச்.ராஜாவிடம் ஒருவர் கொரோனா பரவல் குறித்து ட்விட்டரில் கேள்வி எழுபியிருந்தார். இதற்கு பதிலளித்த எச்.ராஜா, தப்லீக் ஜமாஅத்தினரை மறைமுகமாக குறிப்பிட்டு பதிலளித்தார்.

இது இப்படியிருக்க பலரும் எச்.ராஜாவிடம் கேள்வி எழுப்ப தொடங்கிவிட்டனர். அதில் ஒருவர் , கோவையில் உள்ள யோகா மையத்தில் வெளிநாட்டு பயணிகள் தனிமைப்படுத்தப்பட்டு வைத்துள்ளனர்,சென்னைக்கு அடுத்து கோவை கொரோனா தொற்று அதிகம் உள்ள இடம்.இது குறித்து உங்கள் கருத்து என்ன?, ஏன் கோவையில் அதிக தொற்று ஒரு வேலை யோகா மையம் மூலமாக கொரோனபரவி இருக்குமோ கொஞ்சம் விளக்கவும்” என்று இன்னொருத்தர் சந்தேகம் கேட்டுள்ளார்.

மற்றொருவரோ, “உண்மை ஐயா, இந்த தகவலை ஊடகங்கள் மொத்தமாக மறைக்கின்றனர். உண்மையை மக்கள் தெரிந்துகொள்ள உரிமையுண்டு. நீங்கள் உண்மையை சொல்லுவதற்கு நன்றி. ஆனால், உண்மையை மறைக்கும் எல்லா ஊடகங்களை உண்மையை சொல்லவைப்பது எப்படி என்று ஆவண செய்யுங்கள் ஐயா. நன்றி” என்றும் பாராட்டி உள்ளார்.

இன்னொருவர், “மத அரசியல் ரொம்ப நாட்களுக்கு உங்களுக்கு கை கொடுக்கது” என்று பதிவிட்டுள்ளார்.


Share this News:

Leave a Reply