தீயணைக்கும் பணிகளில் பெண்கள் – தமிழக அரசுக்கு பரிந்துரை!

சென்னை )20 மார்ச் 2022): தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகளில் விரைவில் தீயணைப்பு வீராங்கனைகள் சேர்க்கப்படுகிறார்கள். இதற்கான பரிந்துரை தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

தமிழக அரசு இது குறித்து விரைவில் முடிவு எடுக்கும் என்று தமிழ்நாடு தீயணைப்புத்துறை இயக்குனர் பிரஜ்கிஷோர் ரவி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “எங்களிடம் அதிகாரி பிரிவில் 22 பெண்கள் உள்ளனர். ஆனால் தீயணைப்பு பணியாளர்களுக்கான பெண்கள் எங்களிடம் இல்லை. தீயை அணைக்கும் பணியில் பெண்களை ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளோம்.

அரசின் தீவிர பரிசீலனையில் உள்ள இந்த முடிவு தொடர்பாக நாங்கள் ஏற்கனவே பரிந்துரை செய்துள்ளோம். தமிழக அரசு விரைவில் இது தொடர்பான முடிவை எடுக்கும்.

தீயணைப்பு வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக தாம்பரம் அருகே புதிய அகாடமி அமைக்கப்பட உள்ளது. விரைவில் கட்டுமான பணிகள் தொடங்கும்.

மாநில பேரிடர் மீட்பு பணியில் நிரந்தர பணியாளர்கள் இருக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் பயிற்சி பெறும் போலீசார் வேறு பணிகளுக்கு செல்வதால் அவர்களின் பயிற்சி வீணாகிவிட்டது.” என தெரிவித்தார்.

ஹாட் நியூஸ்:

ஐபிஎல் போட்டியில் சென்னை வெற்றிபெற பாஜகவே காரணம் – புழுதியை கிளப்பும் அண்ணாமலை!

சென்னை (30 மே 2023): ஐபிஎல் போட்டியின் இறுதிப்போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணமே பாஜக தான் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி...

உயிர் நண்பனின் இறுதிச் சடங்கில் தீயில் குதித்து நண்பர் தற்கொலை!

லக்னோ(28 மே 2023): புற்றுநோயால் உயிரிழந்த தனது நண்பரின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட 40 வயதுடைய நபர் ஒருவர் தீயில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் ஃபிரோசாபாத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது....

புதிய நாடாளுமன்றம் திறப்பு – ஒன்றிய அரசு மீது ராகுல் காந்தி காட்டம்!

புதுடெல்லி (25 மே 2023): புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை ஜனாதிபதி முர்முவைக் கொண்டு திறக்காமல், பிரதமர் மோடியைக் கொண்டு திறப்பதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். புதிய நாடாளுமன்றக்...