முஸ்லிம் மத உணர்வுகளை புண்படுத்தி சமூக வலைதளங்களில் பதிந்தவர்களுக்கு ரூ 1 கோடி அபராதம்!

துபாய் (20 ஜன 2020): ஐக்கிய அரபு அமீரகத்தில் முஸ்லிம் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவிட்டவர்களுக்கு அபராதம் மற்றும் நாடு கடத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி சமூக வலைதளங்களில் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் பதிந்த மூன்று பேருக்கு தலா 5 லட்சம் திர்ஹம் (இந்திய ரூபாயில் 9,671,125) அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் அபராதம் கட்டிய பிறகு நாடு கடத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஆண்டு மே மாதம் இலங்கையை சேர்ந்த மூன்று பேர் முஸ்லிம் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் படங்கள், வீடியோக்கள் ஆகியவற்றை ஃபேஸ்புக், இன்ஸ்ட்ராகிராம், உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிந்துள்ளனர். உடன் பதிவிட்ட மூன்று பேரை துபாய் போலீசர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதுகுறித்த வழக்கு துபாய் உயர் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் மேற்கண்டவாறு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஹாட் நியூஸ்: