மோசமான வானிலை – அபுதாபி போலீஸ் எச்சரிக்கை!

அபுதாபி (10 டிச 2022): மோசமான வானிலை காரணமாக வாகனம் ஓட்டும்போது மிகவும் கவனமாக இருக்குமாறு அபுதாபி காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

அபுதாபியில் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. விபத்து அபாயம் உள்ளதால், வாகனங்களின் வேகத்தை குறைக்குமாறு, பயணிகளுக்கு போலீசார் அறிவுறுத்தினர்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த வார இறுதிக்குள் மழையின் தீவிரம் குறையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஹாட் நியூஸ்:

ஐபிஎல் போட்டியில் சென்னை வெற்றிபெற பாஜகவே காரணம் – புழுதியை கிளப்பும் அண்ணாமலை!

சென்னை (30 மே 2023): ஐபிஎல் போட்டியின் இறுதிப்போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணமே பாஜக தான் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி...