பிரதமர் மோடி-யின் கடும் விமர்சகருக்கு குடியுரிமை வழங்கியது அமெரிக்கா..!

822
Aatish Taseer
Aatish Taseer

வாஷிங்டன்(ஜூலை 31):இந்திய வம்சா வழியைச் சேர்ந்தவரான ஆதிஷ் தசீர், அமெரிக்காவின் நியூயார்க்கை மையமாக கொண்ட எழுத்தாளரும் பத்திரிகையாளருமாவார். இவருக்கு கடந்த திங்களன்று அமெரிக்க குடியுரிமை அளிக்கப்படடிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

Aatish Taseer
Aatish Taseer

மோடி அரசாங்கம் இவரது வெளிநாட்டு குடியுரிமை (OCI) Overseas Citizenship of India அட்டையை ரத்து செய்த சில மாதங்களுக்குப் பிறகு, அமெரிக்கா அந்நாட்டின் குடியுரிமையை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்திய அரசு அவரது OCI-ரத்து செய்ததற்கு கூறிய காரணம், அவர் அடிப்படை ஆதாரங்களை சமர்பிக்க தவறியது மற்றும் அவரது உண்மை தகவல்களை மறைத்து வைத்தது.அதாவது அவரது தந்தை பாகிஸ்தானில் பிறந்ததை அறவிக்கத் தவறிவிட்டார் போன்ற காரணங்களாகும்.

இதைப் படிச்சீங்களா?:  புருணை நாட்டு இளவரசர் அஜீம் திடீர் மரணம்!
Aatish
Aatish

இந்த அறிவிப்பை ஆதிஷ், தனது ட்விட்டரில்… சில செய்திகள் எனும் தலைப்பின் கீழ் வெளியிட்டுள்ளார். கீழ் மன்ஹாட்டனில் இன்று நடைபெற்ற சத்தியப்பிரமாண விழாவில், நான் ஒரு அமெரிக்க குடிமகனாக ஆனேன். இந்தியாவில் எனது குடியுரிமையை மோடி அரசு நீக்கிய ஒரு வருடத்திற்குள், இந்த மாபெரும் நாட்டின் ஒரு குடிமகனாக ஆகி இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது என்று குறிப்பிட்டிருந்தார்.

பாரதப் பிரதமர் மோடி-யின் கடும் விமர்சகரான இவர்,’India’s divider in chief’ -‘இந்தியாவின் பிரதான பிரித்தாளும் மனிதன்’ எனும் நூலின் ஆசிரியராக இருந்து கடும் பகையைச் சம்பாதித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.