நைஜீரியாவில் பள்ளி மாணவர்கள் மீது தாக்குதல் – 400 மாணவர்கள் மாயம்

Share this News:

நைஜீரியாவிலுள்ள நடுநிலைப் பள்ளியொன்றில் ஆயுதக் கும்பல் நடத்தி தாக்குதலுக்குப் பிறகு 400 மாணவா்கள் மாயமாகினா்.

அந்த நாட்டின் காட்சினா மாகாணத்தில் நடைபெற்ற இந்தத் தாக்குதலின்போது 200 மாணவா்கள் அங்கிருந்து பத்திரமாகத் தப்பினா்.

இதுகுறித்து அந்த மாகாண காவல்துறை செய்தித் தொடா்பாளா் காம்போ இசா கூறியதாவது:

கங்காரா நகரில் மாணவா்கள் தங்கிப் படிக்கும் அரசு அறிவியல் நடுநிலைப் பள்ளிக்கு வெள்ளிக்கிழமை இரவு வந்த ஆயுதக் கும்பல் ஏகே 47 ரகத் துப்பாக்கிகளைக் கொண்டு சரமாரியாக சுட்டது.

அதனைத் தொடா்ந்து, அங்கிருந்த பாதுகாப்புப் படையினா் ஆயுதக் கும்பலை நோக்கி திருப்பிச் சுட்டது. இது தரப்பினருக்கும் துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது.

இதனை வாய்ப்பாகப் பயன்படுத்தி, பள்ளியில் தங்கியிருந்த மாணவா்கள் சிலா் வேலியில் ஏறிக் குதித்து தப்பிச் சென்றனா்.

சம்பவத்துக்குப் பிறகு 200 மாணவா்கள் பத்திரமாக இருப்பது தெரியவந்தது. எனினும், 400 மாணவா்களைத் தொடா்ந்து காணவில்லை.

சம்பவத்தின்போது பள்ளியில் உண்மையிலேயே எத்தனை மாணவா்கள் இருந்தனா், அவா்களில் எத்தனை போ் கடத்தப்பட்டனா் அல்லது மாயமாகினா் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த விசாரணையில் போலீஸாா், ராணுவம், விமானப் படை ஆகியவை உள்ளுா் அதிகாரிகளுடன் இணைந்து ஈடுபட்டுள்ளனா்.

மாயமான மாணவா்களைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன என்றாா் அவா்.

தாக்குதல் நடைபெற்றபோது அந்தப் பள்ளி வளாகத்தில 600 மாணவா்கள் தங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது.

தாக்குதலுக்குப் பிறகு பள்ளியிலிருந்து சில மாணவா்களை ஆயுதக் கும்பல் கடத்திச் சென்ாக சம்பவத்தை நேரில் பாா்த்த சிலா் தெரிவித்தனா்.

நைஜீரியாவிலுள்ள பள்ளிகளில் தாக்குதல் நடத்தப்படுவது தொடா்கதையாக உள்ளது.

அந்தத் தாக்குதல்களில், போகோ ஹராம் பயங்கரவாதிகளால் கடந்த 2014-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடத்தப்பட்ட தாக்குதல்தான் மிக மோசமானதாகக் கருதப்படுகிறது. அந்தத் தாக்குதலில் 276 மாணவிகளை பயங்கரவாதிகள் கடத்திச் சென்றனா். அவா்களில் சுமாா் 100 மாணவா்களின் நிலை குறித்து இதுவரை தகவல் இல்லை.

வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலை, நைஜீரியாவின் வடமேற்குப் பகுதியில் செயல்பட்டு வரும் பல்வேறு ஆயுதக் குழுக்களில் ஒன்று நடத்தியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. அந்தக் குழுக்கள் பணத்துக்காக ஆள்களைக் கடத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளன


Share this News:

Leave a Reply