கனடா பிரதமரின் மனைவிக்கு கொரோனா வைரஸ் – தனி அறையில் பிரதமர்!

477

டொரன்டோ (13 மார்ச் 2020): கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ. அவருடைய மனைவிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் தடுப்புக்காப்பாக பிரதமர் தனி அறையில் வைக்கப்பட்டுள்ளார்.

ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவி சோஃபி சமீபத்தில் பிரிட்டன் சென்று திரும்பினார். அதையடுத்து அவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. அவரை மருத்துவ பரிசோதனை செய்தபோது அவரை கொரோனா தொற்றியுள்ளது தெரிய வந்தது. எனவே, பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அவருடைய மனைவியும் அடுத்த 14 நாள்களுக்கு தடுப்புக்காப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதைப் படிச்சீங்களா?:  சீனாவின் இந்திய ஆக்கிரமிப்பு - மோகன் பகவத்துக்கு அச்சம் - ராகுல் காந்தி விளாசல்!

கனடாவில் 145 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒருவர் உயிரிழந்துள்ளார்.