அமெரிக்காவில் குழந்தைகள் அதிக அளவில் கொரோனாவால் பாதிப்பு!

நியூயார்க் (15 ஆக 2021): அமெரிக்காவில் மீண்டும் கொரோனா அதிகரித்து வரும் நிலையில், கொரோனாவால் குழந்தைகள் அதிக அளவில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகின்றனர்.

அமெரிக்காவில்கொரோனாவால் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளின் எண்ணிக்கை சனிக்கிழமையன்று 1,900-க்கு மேல் அதிகரித்துள்ளது.

இவர்களுக்கு டெல்டா வகை கொரோனாவே பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் அமெரிக்க மக்கள்தொகையில் பெரும்பாலும் தடுப்பூசி போடப்படாத பகுதியில் கொரோனா டெல்டா மாறுபாடு, வேகமாக பரவி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹாட் நியூஸ்: