கொரோனா வைரஸ் : ஸ்பெயினில் ஒரே நாளில் 443 பேர் உயிரிழப்பு!

224

ஸ்பெயின் (25 மார்ச் 2020): கொரோனா வைரஸ் பாதிப்பால் ஸ்பெயினில் ஒரே நாளில் 443 பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகம் முழுவதும் கொரோனா தொற்று வெகு தீவிரமாகப் பரவி வரும் நிலையில், இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளில் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இதில், ஸ்பெயினில் இன்று ஒரே நாளில் 443 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒரே நாளில் 5,552 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஸ்பெயின் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,434 ஆக அதிகரித்துள்ளது.

இதைப் படிச்சீங்களா?:  கொரோனாவை வைத்து நாடகம் நடத்த வேண்டாம் - ஸ்டாலின் கண்டனம்!

இதன் மூலமாக கரோனா பலி எண்ணிக்கையில் சீனாவை முந்தியுள்ளது ஸ்பெயின். சீனாவில் கரோனாவுக்கு 3,281 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.