கொரோனா வைரஸுக்கான காரணம் – வெளியாகும் பரபரப்பு பின்னணி!

Share this News:

பீஜிங் (27 ஜன 2020): சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலில் இதுவரை 80 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உலகையே அச்சுறுத்தலில் ஆழ்த்தி வரும், இதன் பின்னணி குறித்து பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொரோனா வைரஸ் சீனா மட்டுமல்லாமல் அமெரிக்கா, தென்கொரியா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளிலும் பரவி வருகிறது. இந்த வைரஸ் எவ்வாறு பரவியது என பல்வேறு ஊகங்கள் வெளியாகிவரும் நிலையில், பயோ-வெப்பன் ஆய்வுக் கூடம் மூலமாக பரவியிருக்கும் என இஸ்ரேல் உயிரியல் விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ‘தி வாஷிங்டன் டைம்ஸ்’ இதழுக்கு அவர் அளித்த பேட்டியில், இந்த பரபரப்புத் தகவலை அவர் வெளியிட்டுள்ளார்.

‘சீனாவின் வுஹான் நகரில் தான் முதலில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. அங்கு தான், பயோ-ஆயுதங்கள் உருவாக்கும் ஆய்வுக்கூடத்தை, சீனா உருவாக்கி இருந்தது. இங்கு ஆபத்தான கிருமிகள் மட்டுமே ஆய்வு செய்யப்படும். இங்கிருந்து தான் கொரோனா பரவியிருக்கும்’ இவ்வாறு அவர் கூறினார். இவரது கூற்றை பயோ-வெப்பன் குறித்து அறிந்த பலரும் ஆமோதித்துள்ளனர்.

அதே வேளையில், இக்குற்றச்சாட்டை சீனா மறுத்துள்ளது. ‘வுஹான் இறைச்சி சந்தையிலிருந்து தான் கொரோனா வைரஸ் பரவியுள்ளதாக’ சீனா தெரிவித்து வருகிறது.

கொரோனா வைரஸ் தாக்குதலால் இதுவரை, 80 பேர் பலியாகி உள்ளதோடு கிட்டத்தட்ட 2,744 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.


Share this News:

Leave a Reply