பீஜிங் (15 மார்ச் 2022): சீனாவில் மீண்டும் கொரோனா தொற்று கடுமையாகப் பரவத்துவங்கியுள்ளதைத் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது பரவி வரும் வைரஸ் ஒமிக்ரானின் இரண்டாவது மாறுபாடான ஸ்டில்த் ஒமிக்ரான் என்னும் வைரஸ் ஆகும்.
பல இடங்களில் கொரோனா கடுமையாக பரவி வருவதாக தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ள நிலையில், குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள மக்கள் ஒரு நகரத்திலிருந்து மற்றொரு நகரத்திற்குச் செல்ல காவல்துறையின் அனுமதியைப் பெற வேண்டும். அதேபோல பல நகரங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.