கீழிறங்கும் டொனால்ட் ட்ரம்பின் செல்வாக்கு!

Share this News:

வாஷிங்டன் (01 மே 2020): அமெரிக்காவில் கொரோனாவை கட்டுப்படுத்த அதிபர் ட்ரம்ப் தவறியதன் விளைவு அங்கு அவரது செல்வாக்கு அதிவேகத்தில் சரிந்துள்ளது.

அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற ஐந்து ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. குடியரசுக் கட்சி சார்பில் ட்ரம்ப் தான் வேட்பாளர் என்பது ஏற்கெனவே முடிவுசெய்யப்பட்ட விஷயமாகவே பார்க்கப்படுகிறது.

ஜனநாயகக் கட்சியில் ட்ரம்பை எதிர்த்துப் போட்டியிடுமளவுக்கு வேட்பாளர்கள் இல்லாததால், ட்ரம்ப் தான் அடுத்த அதிபர் அரசியல் நோக்கர்கள் கருதினர். ஆனால், தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்துவதில் அதிபர் ட்ரம்ப் தோல்வியடைந்துவிட்டதாகவே கருதப்படுகிறது. நாடு முழுவதும் சுமார் 11 லட்சம் பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான கொரோனா வைரஸ் நோயாளிகள் அமெரிக்காவில் தான் உள்ளனர்.

உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களில் மூன்றில் ஒருவர் அமெரிக்கராக உள்ளார். இது அதிபரின் செல்வாக்கில் பெரிய சரிவை ஏற்படுத்தியுள்ளதாக தற்போதைய விமர்சனங்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே, கொரோனா வைரசை ஆயுதமாக ஏந்தி தமது அதிபர் பதயைப் பறிக்க சீனா விரும்புவதாக டொனால்ட் ட்ரம்ப் வெளிப்படையாகக் கருத்து தெரிவித்துள்ளார்.


Share this News: