கத்தாரில் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்ட டாக்டர்.ஜாகிர் நாயக் நிகழ்ச்சிகள்!

Share this News:

தோஹா (09 டிசம்பர் 2022): பிரபல இஸ்லாமிய மதபோதகர் டாக்டர். ஜாகிர் நாயக், FIFA World Cup 2022 நடந்து வரும் கத்தாருக்குச் சென்றுள்ளார். அங்கே அவரது தலைமையில் பல்வேறு நிகழ்ச்சிகளும் பொதுக்கூட்டங்களும் நடந்து வருகின்றன.

கத்தாரில் நடக்கும் சர்வதேச உலகக் கால்பந்தாட்ட போட்டியைக் காண, லட்சக்கணக்கான வெளிநாட்டவர்கள் வந்து குவிந்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில், இன்று (09 டிசம்பர் 2022, வெள்ளிக்கிழமை) கத்தார் நாட்டில் உள்ள அல் வக்ரா வில் உள்ள பிரபலமான பள்ளிக்கூடமான தி நெக்ஸ்ட் ஜெனரேஷன் ஸ்கூலில் டாக்டர். ஜாகிர் நாயக்-கின் நிகழ்ச்சி நடந்தது. (இந்நேரம்.காம்)

கத்தார் நாட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வந்து இதில் திரளாக கலந்து கொண்டனர். “அழகிய இஸ்லாம்” எனும் தலைப்பில் நடந்த பொதுக்கூட்டத்தின் இறுதியில் பிற மதத்தினருக்கான கேள்வி-பதில் நிகழ்ச்சி நடந்தது. இதில் சிலர் இஸ்லாம் மதத்தைத் தழுவினர்.

அடுத்து ஒரு சில நிகழ்ச்சிகள், கத்தார் நாட்டில் பிரபலமான Katara மைதானத்தில் நடக்கவிருக்கின்றன.

டாக்டர். ஜாகிர் நாயக்கை தேடப்படும் குற்றவாளியாக தேசிய புலனாய்வு அமைப்பு 2016 ஆம் ஆண்டு அறிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து டாக்டர். ஜாகிர் நாயக், கடந்த 2016 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி இந்தியாவில் இருந்து வெளியேறினார். அதன் பிறகு அவர் இந்தியா திரும்பவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. (இந்நேரம்.காம்)


Share this News:

Leave a Reply