கொரோனா தடுப்பூசிக்கு எதிராக பிரச்சாரம் மேற்கொண்ட பேஸ்புக் இன்ஸ்டா கணக்குகள் முடக்கம்!

புதுடெல்லி (14 ஆக 2021): கொரோனா தடுப்பூசிக்கு எதிராக பிரச்சாரம் மேற்கொண்ட 300 க்கும் அதிகமான பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளை பேஸ்புக் நிறுவனம் முடக்கியுள்ளது.

கொரோனா தடுப்பூசிகளான அஸ்ட்ரா செனெகா மற்றும் ஃபைசருக்கு எதிராகவும், அவை மனிதர்களை சிம்பன்ஸிகளாக மாற்றும் என்று கூறி பேஸ்புக்குகளில் சிலர் பிரச்சாரங்களை முன்னெடுத்துள்ளனர்.

இதன் பின்னணியில் ரஷ்யாவின் ஒரு குழு செயல்பட்டு வருவதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.

முக்கியமாக இந்தியா, லத்தீன் அமெரிக்கா மற்றும் அமெரிக்காவில் உள்ள மக்களிடையே பீதியை ஏற்படுத்தும் விதமாக இந்த பிரச்சாரம் அமைந்துள்ளது.

நவம்பர் மற்றும் டிசம்பர் 2020 இல் ரஷ்ய குழு திட்டமிட்ட போலி பிரச்சாரத்தைத் தொடங்கியது. ஆரம்பத்தில், பிரச்சாரம் மீம்ஸ், ட்ரோல்கள் மற்றும் கருத்துகளைப் பயன்படுத்தியது. பின்னர், ஐந்து மாத இடைவெளிக்குப் பிறகு, குழு கடந்த மே மாதம் சமூக வலைதளங்களில் பதிவுகளுடன் மீண்டும் செயலில் இறங்கியது. இத்னை அடுத்து பேஸ்புக் நிறுவனம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

பேஸ்புக், டிக்டாக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களிலும் தடுப்பூசிக்கு எதிரான பிரச்சாரங்கள் காணப்படுகின்றன.

ஹாட் நியூஸ்:

உயிர் நண்பனின் இறுதிச் சடங்கில் தீயில் குதித்து நண்பர் தற்கொலை!

லக்னோ(28 மே 2023): புற்றுநோயால் உயிரிழந்த தனது நண்பரின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட 40 வயதுடைய நபர் ஒருவர் தீயில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் ஃபிரோசாபாத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது....

பாடதிட்டங்களில் உள்ள நச்சுக் கருத்துகள் அகற்றப்படும் – கர்நாடக முதல்வர் சித்தராமையா திட்டவட்டம்!

பெங்களூரு (30 மே 2023): கர்நாடகாவின் நல்லிணக்கம் மற்றும் மதச்சார்பற்ற பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை, வெறுப்பு அரசியலை பொறுத்துக்கொள்ள முடியாது என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்தார். தனது இல்ல அலுவலகமான...

ஐபிஎல் போட்டியில் சென்னை வெற்றிபெற பாஜகவே காரணம் – புழுதியை கிளப்பும் அண்ணாமலை!

சென்னை (30 மே 2023): ஐபிஎல் போட்டியின் இறுதிப்போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணமே பாஜக தான் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி...