ஒமிக்ரான் வகை கொரோனா வைரசுக்கு முதல் பலி!

லண்டன் (13 டிச 2021):ஒமிக்ரான் வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில், ஒருவர் உயிரிழந்திருக்கக்கூடும் என பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

மேற்கு லண்டனில் பாடிங்க்டன் என்ற இடத்தில் நடந்த தடுப்பூசி முகாமொன்றில் பேசிய அவர், “வருத்தமளிக்கும் விதமாக, ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் சூழல் உள்ளதுதான். அதேபோல வேதனை தரும்வகையில், இதுவரை ஒமிக்ரான் உறுதியானவர்களில் குறைந்தது ஒருவராவது உயிரிழந்துள்ளார்.

இதன் பரவும் வேகத்தை நாம் இன்னும் சரியாக கணிக்க வேண்டியுள்ளது. ஆகவே இதிலிருந்து நம்மை தற்காத்துக்கொள்ள பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை பெற வேண்டும்” என்று கூறியுள்ளார்.

ஹாட் நியூஸ்: