கொரோனா விவகாரம் – முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா ட்ரம்ப் மீது கடும் விமர்சனம்!

நியூயார்க் (10 மே 2020): கொரோனாவை கட்டுப்படுத்தும் விவகாரத்தில் அமெரிக்க அதிபர் டிரம்பின் செயல்பாடு குறித்து முன்னாள் அதிபர் பராக் ஒபாமா விமர்சித்துள்ளார்.

அமெரிக்காவில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் பொறுப்பற்ற நிர்வாகமே இதற்கு காரணம் என விமர்சனம் எழுந்துள்ளது.

இந்நிலையில், தான் அதிபராக இருந்தபோது பணியாற்றிய வெள்ளை மாளிகை அதிகாரிகளுடன் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா பேசிய ஆடியோ வெளியாகியுள்ளது. அதில், கொரோனாவை கையாளும் விவகாரத்தில் அமெரிக்க அதிபரின் செயல்பாடு என்பது முழுமையான குழப்பமான பேரழிவு போன்றது என கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதைப் படிச்சீங்களா?:  சுற்றுலா பயணிகள் வரலாம் - கோரன்டைன் தேவையில்லை!

மேலும், வரும் அதிபர் தேர்தலில் தன்னுடன் இணைந்து ஜோ பீடனுக்கு ஆதரவாக பணியாற்றும்படியும் அவர்களிடம் ஒபாமா கேட்டுக்கொண்டார்.