பிரபல பிரான்ஸ் மாடல் மரைன் எல் ஹிமர் இஸ்லாம் மதத்திற்கு மாறினார் – VIDEO

பாரிஸ் (07 நவ 2022): பிரபல பிரான்ஸ் மாடல் மரைன் எல் ஹிமர் இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளார். இதனை அவரது சமூக வலைதள பக்கத்தில் மரைன் தெரிவித்துள்ளார்.

மரைன் பல மாதங்களுக்கு முன்பு இஸ்லாத்திற்கு மாறினார், நவம்பர் 2 புதன்கிழமை வரை இதை வெளியிடவில்லை. இந்நிலையில் அவரது சமூக வலைதள பக்கத்தில் பதிந்துள்ள பதிவில், சவூதி அரேபியாவின் மக்காவில் உள்ள காபாவின் அருகே ஹிஜாப் அணிந்திருப்பது போன்றும், அத்துடன்ஷஹாதத் உச்சரிப்பது தொடர்பான வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.

“இந்த தருணங்கள் என் வாழ்க்கையின் மிக அழகான நாட்களைக் காட்டுகின்றன” என்று தனது பதிவின் கீழ் எழுதியுள்ள மரைன், சில மாதங்களுக்கு முன்பு தான் ஒரு முஸ்லீம் ஆனதாக தெரிவித்துள்ளார்.

தான் மேற்கொண்ட ஆன்மீகப் பயணம் தன்னை எப்போதும் அல்லாஹ்விடம் இட்டுச் செல்லும் என்று எல் ஹிமர் நம்பிக்கை தெரிவித்ததோடு, இந்தச் செயல்பாட்டில் தனக்கு ஆதரவளித்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

மற்றொரு மதத்திற்கு மாறுவது வெட்கப்பட ஒன்றுமில்லை என்பதை கவனத்தை ஈர்த்த எல் ஹிமர், தனது மனம், இதயம் மற்றும் ஆன்மாவை சமரசம் செய்ததன் விளைவாக மீண்டும் இஸ்லாத்தை தேர்ந்தெடுத்ததாக தெரிவித்துள்ளார்.

மரைன் எல் ஹிமரின் மதமாற்றம் அவரது ரசிகர்களால் பரவலாக வரவேற்கப்பட்டுள்ளது மேலும் அவரது இந்த நடவடிக்கைக்கு வாழ்துக்களும் குவிகின்றன.

மரைன் எல் ஹிமர், ஜூலை 1993 இல், தெற்கு பிரான்சின் போர்டியாக்ஸில் பிறந்தார், இவர் மொராக்கோ-எகிப்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹாட் நியூஸ்: