பாகிஸ்தானில் இம்ரான்கான் அரசு பெரும்பான்மை இழந்தது!

இஸ்லாமாபாத் (30 மார்ச் 2022): இம்ரான்கான் தலைமையிலான பாகிஸ்தான் அரசு பெரும்பான்மையை இழந்ததை தொடர்ந்து, பிரதமர் இம்ரான் கான் இன்று ராஜினாமா செய்ய உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இம்ரான்கானின் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (PTI) கட்சிக்கு ஆதரவளித்து வந்த முட்டாஹிதா குவாமி இயக்கம் கட்சி (MQM-P) ஆதரவை விலக்கி கொண்டுள்ளது.

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பிரதமர் இம்ரான்கான் அரசு மீது எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்துள்ளன. இந்த தீர்மானத்தின் மீது நாளை(வியாழக்கிழமை) விவாதம் நடக்கிறது. அதை தொடர்ந்து 3-ம் தேதி ஓட்டெடுப்பு நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக எதிர்க்கட்சிகளுக்கு தனது பலத்தை காட்டும் விதமாக கடந்த 27-ந்தேி தலைநகர் இஸ்லாமாபாத்தில் பிரதமர் இம்ரான்கான் பிரமாண்ட பேரணியை நடத்தினார். பேரணியில் பேசிய இம்ரான்கான் எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சனம் செய்தார்.

இந்தநிலையில், இம்ரான்கானின் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (PTI) கட்சிக்கு ஆதரவளித்து வந்த முட்டாஹிதா குவாமி இயக்கம் கட்சி (MQM-P) ஆதரவை விலக்கி கொண்டுள்ளது. தொடர்ந்து, எதிர்க்கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கு (PPP) ஆதரவு அளிப்பதாக முட்டாஹிதா குவாமி இயக்கம் அறிவித்துள்ளது. மேலும், முட்டாஹிதா குவாமி கட்சியை சேர்ந்த அமைச்சர்களும் இன்று 12.30 மணிக்கு பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முட்டாஹிதா குவாமி இயக்கம் கட்சியின் அறிவிப்பால் எதிர்க்கட்சிகளின் பலம் 177 ஆக உயர்ந்து இம்ரான்கான் அரசின் பலம் 164 குறைந்துள்ளது.

இதனையடுத்து பாகிஸ்தானில் இம்ரான்கானின் அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்பே இம்ரான்கான் அரசுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பெரும்பான்மையை இழந்துள்ளதால் இம்ரான்கான் தனது பிரதமர் பதவியை இன்று ராஜினமா செய்வார் என்று கூறப்படுகிறது.

ஹாட் நியூஸ்:

புதிய நாடாளுமன்றம் திறப்பு – ஒன்றிய அரசு மீது ராகுல் காந்தி காட்டம்!

புதுடெல்லி (25 மே 2023): புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை ஜனாதிபதி முர்முவைக் கொண்டு திறக்காமல், பிரதமர் மோடியைக் கொண்டு திறப்பதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். புதிய நாடாளுமன்றக்...

அபுதாபியில் திறக்கப்பட்டுள்ள புதிய தீம் பார்க் !

அபுதாபி (25 மே 2023): அபுதாபியில் புதிய தீம் பார்க் 'சீ வேல்ட் அபுதாபி' நேற்று முன் தினம் திறக்கப்பட்டது. பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தும் மிகப்பெரிய தீம் பார்க் நேற்று முன் தினம் தொடங்கப்பட்டது...

உயிர் நண்பனின் இறுதிச் சடங்கில் தீயில் குதித்து நண்பர் தற்கொலை!

லக்னோ(28 மே 2023): புற்றுநோயால் உயிரிழந்த தனது நண்பரின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட 40 வயதுடைய நபர் ஒருவர் தீயில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் ஃபிரோசாபாத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது....