ஏற்கனவே கொரோனா பாதித்தவருக்கு மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு!

208

ஹாங்காங் (25 ஆக 2020): கொரோனா வைரஸ் பாதித்தவருக்கு மீண்டும் அதே பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ஹாங்காங் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

ஆகஸ்ட் இரண்டாவது வாரத்தில் ஸ்பெயினுக்கு சென்று ஹாங்காங்கிற்குத் திரும்பிய 33 வயதான ஒரு நபருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாகவும், அவருக்கு ஏற்கனவே மார்ச் மாதத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தாகவும அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அவருக்கு முதல் முறையாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டபோது லேசான அறிகுறிகள் இருந்தன, இரண்டாவது முறையாக தாக்கியபோது எந்த அறிகுறியும் இல்லை; ஹாங்காங் விமான நிலையத்தில் ஸ்கிரீனிங் மற்றும் சோதனை மூலம் அவரது சமீபத்திய தொற்று கண்டறியப்பட்டது. என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இதைப் படிச்சீங்களா?:  கொரோனா பாதிப்பால் மத்திய அமைச்சர் மரணம்!

இதன்மூலம் கொரோனா வைரஸ் ஏற்கனவே தாக்கியிருந்தால் , “சிலருக்கு வாழ்நாள் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்காது என்பது இல்லை என்று கூறிய அவர்கள், மேலும் எத்தனை பேர் இதுபோன்ற கொரோனா மறு பாதிப்பை சந்திப்பார்கள்? என்று கூற இயலாது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.