கொரோனா தடுப்பு மருந்து தயாரிப்பு குழு தலைவராக முஸ்லிம் மருத்துவர் நியமனம்!

வாஷிங்டன் (20 மே 2020): அமெரிக்காவில் கொரோனா தடுப்பு மருந்து தயாரிப்புக் குழு தலைவராக முஸ்லிம் மருத்துவ விஞ்ஞானியை நியமித்து அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் (கோவிட் 19) உலக அளவில் அதி வேகத்தில் பரவி வருகிறது. இதில் அமெரிக்காவே அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

இதுவரை இதற்கு தடுப்பு மருந்து கண்டு பிடிக்கப்படவில்லை. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தடுப்பு மருந்து கண்டு பிடிப்பதில் முழு வீச்சில் இறங்கியுள்ளன.

இந்நிலையில் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் மருத்துவ குழு  (Operation Warp Speed) தலைவராக மொரோக்காவை சேர்ந்தவரும் தற்போது அமெரிக்காவில் வசித்து வருபவருமான, முஸ்லிம் மருத்துவ விஞ்ஞானி டாக்டர் முன்சிஃப் முஹம்மது ஸ்லோயியை நியமித்து அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

இதைப் படிச்சீங்களா?:  ஒன்றரை மாத மருத்துவ சிகிச்சை வீண் - எஸ்பி.பால சுப்ரமணியன் மறைந்தார்!

வெள்ளை மாளிகையில் நடந்த கொரோனா தடுப்பு மருந்து தயாரிப்பு குழுவான (Operation Warp Speed) என்ற குழு குறித்த கூட்டத்தில் அதிபர் ட்ரம் டாக்டர் முன்சிஃப் முஹம்மது ஸ்லோயியை கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் மருத்துவ குழு தலைவராக நியமித்து உத்தரவிட்டார்.