ஒரு பெண் பல ஆண்களை திருமணம் செய்துகொள்ள அனுமதி – பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சட்டம்!

Share this News:

கேப்டவுன் (29 ஜூன் 2021): தென் ஆப்ரிக்காவில் பெண்கள் பல மணம் புரிவதை சட்டப்பூர்வமாக்கும் முன்மொழிவு ஒன்று அரசால் முன்வைக்கப்பட்டுள்ளது

தென்னாப்பிரிக்காவில் திருமண விவகாரத்தில் பெண்களுக்கும் சம உரிமை அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வந்த நிலையில், ஒரு பெண் பல ஆண்களை திருமணம் செய்துகொள்ளலாம் என்று திருமணம் சட்டத்தில் சீர்திருத்தம் செய்து, புதிய சட்டத்தினை அமல்படுத்த பாராளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த புதிய சட்டம் நிறைவேற்றப்படுவது தொடர்பாக பல்வேறு தரப்பின் கருத்தை கேட்டுள்ளது அரசு. அரசின் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு எழுந்திருக்கிறது.

இந்த விசயத்தில் ஆணுக்கு கொடுக்கும் உரிமையை பெண்ணுக்கும் கொடுக்க கூடாது. பிறக்கும் குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கும். தென்னாப்பிரிக்க கலாச்சாரத்தை அழித்துவிடும் என்றெல்லாம் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

ஒரு ஆண் பல பெண்களை திருமணம் செய்துகொள்ள அனுமதி தந்தது போல், ஓரின திருமணங்களுக்கு அனுமதி அளித்தது போல், ஒரு பெண் பல ஆண்களை திருமணம் செய்துகொள்ள அனுமதி அளிக்கும் முடிவில் உறுதியாக இருக்கிறது தென்னாப்பிரிக்க அரசு.


Share this News:

Leave a Reply