50 டிகிரி கடும் வெப்பம் – 486 பேர் பலி!

Share this News:

டொரோண்டோ (01 ஜூலை 2021): கனடாவில் வரலாறு காணாத அளவுக்கு நிலவும் வெப்பத்தின் காரணமாக, பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் கடந்த ஐந்து நாட்களில் 486 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடும் குளிர் மற்றும் பனிப்பொழிவுக்கு பெயர் போனது கனடா நாடு. அங்கு ஜூன் முதல் ஆகஸ்ட் வரை கோடைக்காலம். இந்தாண்டு கோடைக்காலம் கடும் வெப்பமானதாக உள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியாவின் லிட்டனில் செவ்வாயன்று புதிய உச்சமாக 49.5 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. இதனால் பள்ளிகள், தடுப்பூசி மையங்களை மூட வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டனர்.

இந்நிலையில் கனடாவில் உள்ள வடமேற்குப் பிராந்தியங்களில் தற்போது அனல் காற்று வீசுகிறது. அதீத வெப்பத்தால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 121டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பம் பதிவாகியுள்ளது. .

வெப்பத்தின் தாக்கத்தை தணித்துக் கொள்ளும் பொருட்டு சாலையோரத்தில் நீரூற்றுகள் அமைக்கப்பட்டுள்ளன. கனடா மட்டுமின்றி, அமெரிக்காவின் மேற்குப்பகுதியிலும் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளது. ஒரே நாளில் கனடா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த 200 பேர் வெப்பத்தின் தாக்கத்தால் உயிரிழந்துள்ளனர்.


Share this News:

Leave a Reply