இனி, 2036 வரை நான்தான்” – புதின்

மாஸ்கோ (02 ஜூலை 2020): ரஷ்யாவின் அதிபராக உள்ள விளாடிமிர் புதின் 2036 ஆம் ஆண்டு வரை அதிபர் பதவியில் தொடர்ந்திருப்பதற்கு மக்கள் ஆதரவளித்து வாக்களித்துள்ளனர்.

1999 ஆம் ஆண்டு போரிஸ் எல்ட்சின் பதவியை ராஜினாமா செய்த பிறகு ரஷ்ய உளவு அமைப்பு கேஜிபியின் முன்னாள் உளவாளியாக இருந்த புதின் செயல் அதிபராக பதவியேற்றார். அதன் பின் 2008 ஆம் ஆண்டு பிரதமராக பதவியேற்றார். 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றார். 2014 ஆம் ஆண்டு நான்காவது முறையாக பதவியேற்ற புதின் பதவிக்கலாம் 2024 ஆம் ஆண்டு முடிவடைகிறது.

இதைப் படிச்சீங்களா?:  இம்ரான்கான் மீது ஜாவித் மியான்தத் பாய்ச்சல்!

புதின் பதவியில் தொடர்ந்து இருப்பதற்காக மக்கள் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் 78 சதவிகித மக்கள் புதின் 2036 ஆம் ஆண்டு வரை பதவியில் தொடர வாக்களித்துள்ளனர். 2036 ஆம் ஆண்டு வரை புதின் பதவியில் இருக்கலாம் என தேர்தல் ஆணையமும் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.