உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் – முக்கிய நகரங்கள் மீது குண்டு மழை!

மாஸ்கோ (24 பிப் 2022): உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலை தொடங்கியுள்ளது.

ரஷ்ய அதிபர் புதினின் உத்தரவை தொடர்ந்து, தற்போது அந்நாட்டு படைகள், உக்ரைன் தலைநகர் கீவ்-வில் தனது தாக்குதலை தொடங்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் கிழக்கு உக்ரைனையும் தற்போது ரஷ்யா தாக்கி வருவதாக கூறப்படுகிறது.

உக்ரைனின் பல நகரங்களில் ரஷ்ய படைகள் குண்டு மழை பொழிவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கிழக்கு உக்ரைனில் ரஷ்ய நடவடிக்கைகளை எதிர்ப்பவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என அதிபர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார். உக்ரைன் நாட்டில் தாக்குதல் நடத்தும் ரஷ்யாவுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஹாட் நியூஸ்: