அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை!

அலாஸ்கா (29 ஜூலை 2021): அமெரிக்காவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தை அடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க புவியியல் ஆய்வகத்தின் முதற்கட்ட தகவல்களின்படி, அலாஸ்காவின் சில பகுதிகள் கடற்கரையில் இந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 8.2 ஆக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தை அடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அலாஸ்காவின் பெர்ரிவில்லுக்கு தென்கிழக்கில் 56 மைல் (91 கிலோமீட்டர்) தொலைவில் , உள்ளூர் நேரம் இரவு 10:15 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தை அடுத்து மாநிலத்தின் சில பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக யு.எஸ். தேசிய சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.

ஹாட் நியூஸ்: