தாய்லாந்து வளைகுடாவில் போர்க்கப்பல் மூழ்கியதில் 31 மாலுமிகளை காணவில்லை!

தாய்லாந்தில் போர்க்கப்பல் மூழ்கியதில் 31 மாலுமிகளை காணவில்லை 100க்கும் மேற்பட்ட மாலுமிகளை ஏற்றிச் சென்ற கப்பல் வளைகுடாவில் புயலில் சிக்கியதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

இதுவரை 75 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், 31 பேர் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விபத்து நடந்து 12 மணி நேரத்திற்கும் மேலாகிவிட்டதாகவும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் கடற்படை செய்தித் தொடர்பாளர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், “கப்பலில் தண்ணீர் புகுந்ததால் திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டது. ராணுவ வரலாற்றில் இதுவே முதல் சம்பவம். இன்னும் செயல்பாட்டில் இருந்த போர்க்கப்பல் புயலில் மூழ்கியது.

கப்பல் மூழ்கும் முன் அதன் கட்டுப்பாட்டை இழக்காமல் இருக்க ஊழியர்கள் தங்களால் இயன்றவரை முயற்சித்ததாக”அவர் கூறினார்.

பிரச்சுவாப் கிரி கான் மாகாணத்தில் பேங் சபானுக்கு மேற்கே 32 கி.மீ தொலைவில் கப்பல் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது. இந்த சம்பவம் நடந்துள்ளதாக தாய்லாந்து கடற்படையின் ட்விட்டர் கணக்கு பதிவிட்டுள்ளது.

ஹாட் நியூஸ்:

உயிர் நண்பனின் இறுதிச் சடங்கில் தீயில் குதித்து நண்பர் தற்கொலை!

லக்னோ(28 மே 2023): புற்றுநோயால் உயிரிழந்த தனது நண்பரின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட 40 வயதுடைய நபர் ஒருவர் தீயில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் ஃபிரோசாபாத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது....

அபுதாபியில் திறக்கப்பட்டுள்ள புதிய தீம் பார்க் !

அபுதாபி (25 மே 2023): அபுதாபியில் புதிய தீம் பார்க் 'சீ வேல்ட் அபுதாபி' நேற்று முன் தினம் திறக்கப்பட்டது. பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தும் மிகப்பெரிய தீம் பார்க் நேற்று முன் தினம் தொடங்கப்பட்டது...

புதிய நாடாளுமன்றம் திறப்பு – ஒன்றிய அரசு மீது ராகுல் காந்தி காட்டம்!

புதுடெல்லி (25 மே 2023): புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை ஜனாதிபதி முர்முவைக் கொண்டு திறக்காமல், பிரதமர் மோடியைக் கொண்டு திறப்பதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். புதிய நாடாளுமன்றக்...