அமெரிக்க அதிபர் ட்ரம்ப் திடீர் பல்டி!

Share this News:

வாஷிங்டன் (09 ஏப் 2020): இந்தியாவுக்கு மிரடல் விடுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் திடீரென பாராட்டு தெரிவித்துள்ளார்.

“மலேரியாவிற்கு பயன்படுத்தப்படும் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யவில்லை என்றால், இந்தியா கடும் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்” என்று அமெரிக்கா மிரட்டல் விடுத்திருந்தது.

இதனை அடுத்து ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தை அதிக அளவில் உற்பத்தி செய்து வரும் இந்தியா, அமெரிக்காவுக்கு உதவும் வகையில் அந்த மருந்தின் ஏற்றுமதிக்கு கடந்த மாா்ச் 25-ஆம் தேதி விதித்திருந்த தடையை நீக்கி உத்தரவிட்டது. மேலும் நேற்று முன் தினம் அமெரிக்காவுக்கு ஹைட்ராக்ஸி குளோரோயின் மருந்தை இந்தியா அனுப்பி வைத்தது.

இதற்கு நன்றி தெரிவித்துள்ள டொனால்ட் ட்ரம்ப், இந்திய மக்களுக்கும், இந்தியாவுக்கும் தனது நன்றியை உரிதாக்கிக் கொள்வதாக தெரிவித்துள்ளார். மேலும், அசாதாரண சூழலில் இந்தியா செய்துள்ள உதவியை தாம் ஒரு போதும் மறக்கமாட்டேன் என நெகிழ்ந்துள்ளார். இதுபோன்ற இக்கட்டான காலகட்டங்களில் தான் நட்பு நாடுகளுக்கு இடையே நெருக்கமான ஒத்துழைப்பு தேவைப்படுவதாகவும், கொரோனாவை அழிக்கும் இந்த போராட்டத்தில் மனிதநேயத்துடன் உதவி புரிந்த இந்தியாவின் வலிமையான தலைவர் பிரதமர் மோடிக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.


Share this News:

Leave a Reply