தாலிபான்கள் நெகிழ்வுத் தன்மையுடன் நடந்து கொண்டனர்: அமெரிக்கா

Share this News:

நியூயார்க் (10 செப் 2021): அமெரிக்க மற்றும் கூட்டுப் படைகள் ஆப்கானைவிட்டு வெளியேறிய பின்னர் முதல்முறையாக ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க உள்ளிட்ட பிற நாடுகளின் குடியுரிமை பெற்ற 113 பேர் கத்தர் வந்தடைந்தனர்.

இதுபற்றி செய்தி வெளியிட்டுள்ள அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக் குழு செயலாளர், அமெரிக்க குடியுரிமை மற்றும் நீண்ட கால அமெரிக்க விசா வைத்திருப்போர் ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா வர அமெரிக்க அரசு கத்தர் நாட்டுடன் இணைந்து முயற்சி செய்தது. தாலிபான்களுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து பயணிகள் கத்தருக்கு பாதுகாப்பாக வந்தடைந்தனர்.

காபூல் விமான நிலையத்திலிருந்து பயணிகள் வெளியேற தாலிபான்கள் ஒத்துழைப்பு கொடுத்தனர். நெகிழ்வுத் தன்மையுடன் நடந்து கொண்ட தாலிபான்கள் எங்களுடன் சிறந்த தொழில் பண்பாட்டுடன் நடந்து கொண்டனர்.

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத அச்சுறுத்தல் தொடர்ந்து இருப்பதால் அங்கு இன்னும் இருக்கும் அமெரிக்க குடியுரிமை பெற்றவர்களையும் நீண்ட கால விசா வைத்திருப்பவர்களையும் அமெரிக்க இராணுவத்துக்காக பணி செய்தோரையும் பாதுகாப்பாக அழைத்து வரும் பணி தொடரும் என்று கூறியுள்ளார்.


Share this News:

Leave a Reply