பைஸரை தொடர்ந்து மேலும் ஒரு கொரோனா மாத்திரைக்கு அமெரிக்கா ஒப்புதல்!

நியூயார்க் (25 டிச 2021): அமெரிக்காவில் இரண்டாவது கோவிட் மாத்திரைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கொரோனாவுக்கு பைசர் (Pfizer) நிறுவனம் மாத்திரை கண்டுபிடித்துள்ளது. இதற்கு அங்கிகாரம் கிடைத்த மறுநாளே இரண்டாவது மாத்திரை அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. புதிய மாத்திரையை மெர்க் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது.

கோவிட் நோயால் பாதிக்கப்பட்ட ஐந்து நாட்களுக்குள் மாத்திரையை உட்கொள்ள வேண்டும். இது இறப்பு மற்றும் மருத்துவமனையில் தங்குவதை 30 சதவிகிதம் குறைக்கும் என்று நிறுவனம் கூறுகிறது. அதேவேளை பைசர் மாத்திரை 90 சதவீதம் குறைப்பதாக அந்நிறுவனம் கூறுகிறது.

பைசர் மாத்திரையின் பக்க விளைவுகள் வயிற்றுப்போக்கு, ருசி பார்ப்பதில் சிரமம் மற்றும் வாந்தி போன்றவைகளாகும். கர்ப்பிணிகள் அல்லது பாலூட்டும் பெண்கள் மாத்திரையை எடுத்துக்கொள்ளக்கூடாது என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஹாட் நியூஸ்: