மதம் மாறினார் உலகப்புகழ் பெற்ற பளு தூக்கும் வீராங்கனை..!

944
Rebeka Koha
Rebeka Koha

ரிகா-லாத்வியா (28 ஜூலை 2020):லாத்வியா நாட்டை சேர்ந்த உலகப்புகழ் பெற்ற பளு தூக்கும் வீராங்கனையான ரெபெகா கொஹா (Rebeka Koha), தான் இஸ்லாத்தைத் தழுவிவிட்டதாக இன்று அறிவித்திருக்கிறார். 2016 ஒலிம்பிக் போட்டிகளில் நான்காவது இடத்தையும், ஜுனியர் உலக சாதனைகளுக்கும் உரிமையாளரான ரெபெக்கா, லாத்வியா அரசின் ‘வளர்ந்து வரும் நட்சத்திரம்’ விருதையும் பெற்றவராவார்.

“இன்று என் வாழ்க்கையின் மிகப்பெரிய முடிவை எடுத்திருக்கிறேன். மிகவும் மகிழ்ச்சியாக உணரும் அதே நேரம் சரியான முடிவையே எடுத்திருக்கிறேன் என்பதையும் உங்களுக்கு கூற விரும்புகிறேன். உங்களிடம் இருந்து நான் எதிர்பார்ப்பதெல்லாம் என் முடிவுக்கான மதிப்பை மட்டுமே. இத்தருணத்தில் நல்லதாக கூற உங்களிடம் ஒன்றும் இல்லையென்றால் தயவுக்கூர்ந்து அமைதியாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இன்று எனக்கு சிறப்பான நாள், காரணம், நான் முஸ்லிமாகிவிட்டேன். ஷஹாதாவை முன்மொழிந்து இஸ்லாத்தில் நுழைந்து விட்டேன். இன்றிலிருந்து என் வாழ்வின் புதிய மற்றும் அழகான அத்தியாயத்தை தொடங்குகிறேன்”

மேலும், தன்னுடைய முந்தைய வாழ்வின் போது எடுக்கப்பட்ட, உடல் பாகங்கள் தெரியும்படியான படங்களையும் யாரும் இனி எங்கேயும் பகிர வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார் ரெபெக்கா. இதுகுறித்த அவருடைய Instagram பதிவை காண:-

View this post on Instagram

Dear friends, followers and just everybody! I made a big decision in my life! And all I can tell is that I’m happy and thankful about it☺️I’m sure for myself that I did the right thing❤️ The only thing what I’m asking about is RESPECT and if you have nothing good to say you can leave and better remain silent!🙂 Today is a special day for me, because I became a Muslim🧕🏻 At 3:48pm I did the Shahada(which is a declaration of faith aka converting) and entered Islam🙏🏻 from here I believe that the new and beautiful chapter of my life can begin 🙌🏻😍🤩 ‼️As I’m a muslim now I would like to ask you to not post and share any pictures of me (if you have ofc) anywhere for a public use where is seen my hair and/or body(arms, neck, legs).‼️ Thanks to those who supports me and stays with me no matter what! Alhamdulillah, wishing you all the best and God bless all of you❤️ #muslim #hijab #hijabigirl #converting #islam

A post shared by Rebeka Koha (@rebeka_koha) on

இதைப் படிச்சீங்களா?:  பிரான்ஸ் தேவாலயத்தில் நடந்த கத்தி குத்தில் 3 பேர் பலி!