முக்கியமான நேரத்தில் ட்ரம்பின் முடிவு – உலக தலைவர்கள் கவலை!

Share this News:

வாஷிங்டன் (15 ஏப் 2020): உலக சுகாதார நிறுவனத்திற்கு வழங்கப்படும் நிதியை நிறுத்துவது என்ற அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் முடிவுக்கு, உலக நாடுகளின் தலைவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

சீனாவிலிருந்து பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ், இன்று உலகையே கதி கலங்க வைத்துள்ளது. அமெரிக்காவில் கொரோனாவுக்கு கொத்து கொத்தாய் மக்கள் பலியாகி வருகின்றனர்.

இந்நிலையில் அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் “கொரோனா வைரஸ் தொற்றுநோய் விவகாரத்தில் உலக சுகாதார அமைப்பு சரியான நேரத்தில், வெளிப்படையான முறையில் தகவல்களைப் பெறவும், கண்காணிக்கவும், பகிர்ந்து கொள்ளவும் தவறிவிட்டது.  முன்னரே அறிவித்தபடி உலக சுகாதார அமைப்பு சீனாவிற்கு ஆதரவாக செயல்படுவதால் உலக சுகாதார நிறுவனத்திற்கு வழங்கும் நிதியுதவி நிறுத்தப்படுகிறது” என்றார்.

இதற்கு கடும் அதிருப்தி தெரிவித்துள்ள உலக தலைவர்கள், நெருக்கடியான நேரத்தில் ட்ரம்பின் முடிவு கவலை அளிக்கிறது. எனினும் ட்ரம்ப் தவிர மற்ற உலக நாடுகளின் தலைவர்கள் உலக சுகாதார அமைப்புக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளனர்.


Share this News:

Leave a Reply