பீகார் அமைச்சரவையை பிரிப்பதில் குழப்பம் – நிதிஷ் குமாருக்கு பாஜக நெருக்கடி!

பாட்னா (14 நவ 2020): பீகாரில், என்.டி.ஏ ஆட்சியமைக்கும் நிலையில் துறைகளைப் பிரிப்பதில் பாஜக தொடர்ந்து தகராறு செய்து வருகிறது. பிகாரில் நிதிஷ்குமார் கட்சி குறைவான இடங்களை பிடித்த போதும் அவரே மீண்டும் முதல்வராக தேர்ந்தெடுக்கப்படவுள்ளார். ஆனால் துணை முதலமைச்சர் யார் என்று பாஜக இன்னும் முடிவு செய்யவில்லை. என்டிஏ நாளை நடத்தும் கூட்டத்தில் பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங்கும் கலந்து கொள்வார் என்பது தெரியவந்துள்ளது. துணை முதல்வர் மட்டுமல்லாமல் உள்துறை, நிதி மற்றும் கல்வித் துறைகள்…

மேலும்...

திருமணமாகி 10 நாட்களில் சோகம் – புது மண தம்பதிகள் சாலை விபத்தில் மரணம்!

கோழிக்கோடு (14 நவ 2020): திருமணமாகி பத்தே நாட்கள் ஆன புதுமணத் தம்பதிகள் சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த சலாவுதீன் (25), அவரது மனைவி பாத்திமா ஜுமனா (19) ஆகிய இருவரும் புல்லட்டில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கக்கஞ்சேரி ஸ்பின்னிங் மில் அருகே சென்று கொண்டிருந்தபோது, புல்லட்டின் மீது டேங்கர் லாரி மோதி விபத்து ஏற்பட்டதில் சம்பவ இடத்திலேயே சலாவுதீன் இறந்தார். பாத்திமா ஜுமனா மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில்…

மேலும்...
Sanjay Rawath

ராகுல் காந்திக்கு ஆதரவாக ஒபாமா மீது சிவசேனா கடும் தாக்கு!

புதுடெல்லி (14 நவ 2020): ராகுல் காந்தி குறித்த ஒபாமாவின் விமர்சனத்திற்கு சிவசேனா ஒபாமாவிற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா அவர் எழுதியுள்ள புத்தகத்தில் ராகுல் காந்தி குறித்து பாடங்களை சரியாக படிக்காத மாணவர் என்பதாக விமர்சித்துள்ளார். மேலும் ராகுல் காந்தி ஒரு ஆசிரியருக்கு முன்னால் தான் எல்லாம் தெரிந்ததை போன்று பாசாங்கு செய்ய முயற்சிக்கும் மாணவனைப் போன்றவர் என்று பராக் ஒபாமா கூறியிருந்தார். ஒபாமாவின் இந்த கருத்திற்கு சிவசேனா தலைவர் சஞ்சய்…

மேலும்...

ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி தீபாவளி கொண்டாட்டம்!

ஜெய்பூர் (14 நவ 2020): பிரதமர் நரேந்திர மோடி ராணுவ வீரர்களுக்கு இனிப்புகள் வழங்கி தீபாவளி கொண்டாடினார். பிரதமர் ஆனது முதல் நரேந்திர மோடி ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையை ராணுவ வீரர்களுடன் கொண்டாடி வருகிறார். இந்த ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் இருக்கும் லோங்கெவலா ராணுவ மையத்தில் தீபாவளியை கொண்டாட அங்கு சென்றுள்ளார். அவருடன் முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத், ராணுவ தளபதி நரவானே உள்ளிட்டோரும் தீபாவளியை கொண்டாடுகின்றனர். நாட்டு மக்களுக்கு தீபாவளி வாழ்த்து…

மேலும்...

அமித்ஷாவின் புகைப்படம் நீக்கம் ஏன்? – ட்விட்டர் விளக்கம்!

புதுடெல்லி (13 நவ 2020): மத்திய அமைச்சர் அமித் ஷாவின் சுயவிவர புகைப்படத்தை ட்விட்டர் திடீரென நீக்கியது. அதற்கான காரணம் என்ன? என்பது குறித்து ட்விட்டர் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. அமித் ஷாவின் ட்விட்டர் கணக்கில் சுயவிவர படம் நேற்று திடீரென ட்விட்டரால் அகற்றப்பட்டது. ட்விட்டரின் நடவடிக்கை பதிப்புரிமை மீறலை அடிப்படையாகக் கொண்டது. என்பதாக ட்விட்டர் அப்போது தெரிவித்திருந்தது. இந்நிலையில் ‘கவனக்குறைவான பிழை காரணமாக, எங்கள் உலகளாவிய பதிப்புரிமை கொள்கைகளின் ஒரு பகுதியாக அமித் ஷாவின் ட்விட்டர்…

மேலும்...

வடமாநிலங்களின் தவிற்க முடியாத தலைவராக வளர்கிறார் உவைசி – பிரபல ஊடகவியலாளர் கருத்து!

திருவனந்தபுரம் (13 நவ 2020): பீகாரில் தேஜஸ்வி தலைமையிலான மெகா கூட்டணி தோல்விக்கு அசாதுத்தீன் உவைசியே காரணம் என்ற கருத்து முற்றிலும் தவறானது என்று பிரபல மலையாள எழுத்தாளரும், ஊடகவியலாளருமான என்.எஸ்.மாதவன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரபல ஊடகத்தில் அவர் எழுதியுள்ள கட்டுரையில் கூறியிருப்பதாவது: வடமாநிலங்களில் முஸ்லிம்களின் தவிற்கமுடியாத தலைவராக உவைசி வளர்ந்து வருவதையே பீகாரில் அவரின் வாக்கு சதவீதம் காட்டுகிறது. தேஜஸ்வி தலைமையிலான கூட்டணி வழக்கமான வாக்குகளை பெற்றதாக தெரியவில்லை. அதனை பெற்றிருந்தாலே தேஜஸ்வி கூட்டணி ஆட்சி…

மேலும்...

மக்கள் எங்களுக்கு ஆதரவு, தேர்தல் ஆணையம் பாஜகவுக்கு ஆதரவு :தேஜஸ்வி!

பாட்னா(12 நவ 2020): பிகாரில் தேர்தல் ஆணையத்தின் ஆதரவிலேயே பாஜக வெற்றி பெற்றதாக தேஜஸ்வி குற்றம் சாட்டியுள்ளார். தேர்தலில் வாக்குகள் மெகா கூட்டணிக்கு ஆதரவாக இருந்தன, ஆனால் தேர்தல் ஆணையம் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது. அஞ்சல் வாக்குகள் கணக்கிடப்படவில்லை என்று தேஜஸ்வி யாதவ் குற்றம் சாட்டியுள்ளார். தபால் வாக்குகளை தேர்தல் ஆணையம் ஏன் ரத்து செய்தது? மறுபரிசீலனை செய்வதற்கான கோரிக்கையை கூட தேர்தல் ஆணையம் ஏற்கவில்லை என்று தேஜஸ்வி மேலும் கூறினார். குறைந்தது 20…

மேலும்...

பீகாரில் தேஜஸ்வி தலைமையில் ஆட்சி அமைக்க முயற்சி!

பாட்னா (12 நவ 2020): பீகாரில் 125 இடங்களை வென்ற தேசிய ஜனநாயக கூட்டணி, அரசாங்கத்தை அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ள நிலையில் தேஜஸ்வி தலைமையிலான மெகா கூட்டணி ஆட்சி அமைக்க சாத்தியம் உள்ளதா என ஆராய்ந்து வருகிறது. பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி, அரசாங்கத்தை அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளது. கடந்த முறை ஜே.டி.யுவில் 17 அமைச்சர்களும், பாஜக 12 அமைச்சர்களும் இருந்தனர். இந்த நேரத்தில் பாஜக 74 இடங்களைக் கொண்டுள்ள நிலையில், வீடு மற்றும் கல்வி உள்ளிட்ட…

மேலும்...

அர்னாபுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் சித்திக் காப்பானுக்கு இல்லை – கபில் சிபல் காரசார வாதம்!

புதுடெல்லி (11 நவ 2020): அர்னாப் கோஸ்வாமி ஜாமீன் மீதான விசாரணையின்போது, மலையாள பத்திரிகையாளர் சித்திக் காப்பானின் விடுதலைதான் மிக முக்கியமானது, அர்னாப் கோஸ்வாமியின் ஜாமீன் முக்கியமல்ல என்று கபில் சிபல் உச்ச நீதிமன்றத்தில் வாதாடினார். ஹத்ராஸ் சம்பவத்தை கவரேஜ் செய்ய சென்ற மலையாள பத்திரிகையாளர் சித்திக் கப்பனை உ.பி. போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரது விடுதலை மீதான விசாரனை மனுவை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் அர்னாபின் மீதான ஜாமீன் மனு உடனடி…

மேலும்...

அர்னாப் கோஸ்வாமிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன்!

புதுடெல்லி (11 நவ 2020): அர்னாப் கோஸ்வாமிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை அடுத்து அவர் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார். 2018 ஆம் ஆண்டு கட்டிடக் கலைஞர் அன்வாய் நாயக் மற்றும் அவரது தாயார் குமுத் நாயக் ஆகியோர் அலிபாக்கில் உள்ள அவர்களது வீட்டில் இறந்து கிடந்தனர். மரணத்திற்கான காரணம் தற்கொலை என்பதாக கூறப்பட்டது. அன்வாய் ஆங்கிலத்தில் எழுதிய தற்கொலைக் குறிப்பில் , அன்வாய்க்கு மூன்று நிறுவனங்களிடமிருந்து வரவேண்டிய பணம் தனக்கு கிடைக்கவில்லை என்றும் தற்கொலை செய்து…

மேலும்...