பாஜக மண்ணை கவ்வ வேண்டியதுதான் – பாஜக தலைவர்கள் அதிருப்தி!

புதுடெல்லி (24 ஜன 2021): விவசாயிகளின் வேலைநிறுத்தத்தில் சமரசம் செய்யக்கூடாது என்ற மத்திய அரசின் முடிவு குறித்து பஞ்சாப் பாஜக தலைவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி நினைத்திருந்தால் வேலைநிறுத்தத்தை ஒரு நாளில் முடித்திருக்க முடியும் என்று பாஜக தேசிய துணைத் தலைவர் லட்சுமி காந்தா சாவ்லா கூறினார். அடுத்த மாதம் பஞ்சாபில் நடைபெறும் உள்ளாட்சி அமைப்பு தேர்தலில் விவசாயிகளின் வேலைநிறுத்தம் பாஜகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்றும் பாஜாக தலைவர் தெரிவித்துள்ளார். பஞ்சஸப்பில் நகராட்சி மன்றத்…

மேலும்...

மேற்கு வங்கத்தில் மம்தா அமைச்சரவையிலிருந்து மற்றும் ஒரு அமைச்சர் ராஜினாமா!

கொல்கத்தா (22 ஜன 2021): மேற்கு வங்க மம்தா தலைமையிலான அமைச்சரவையிலிருந்து வனத்துறை அமைச்சர் ராஜீப் பானர்ஜி ராஜினாமா செய்துள்ளார். தேர்தலுக்கு சில மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், திரிணாமுல் காங்கிரசுக்கும் பாஜகவுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. திரிணாமுல் காங்கிரஸிலிருந்து தொடர்ந்து பலர் விலகி வருவதால் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் ராஜீப் பானர்ஜியும் பதவி விலகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். ராஜீப் பானர்ஜி தனது மேற்கு வங்காள மக்களுக்கு சேவை செய்ய முடிந்ததில் பெருமை…

மேலும்...

புனே கொரோனா தடுப்பூசி தயாரிப்பு தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து!

புனே (21 ஜன 2021): நாட்டின் முன்னணி கோவிட் தடுப்பூசி உற்பத்தி மையமான சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. புனே சீரம் நிறுவனத்தில் டெர்மினல் ஒன் அருகே மதியம் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்க முயற்சிகள் நடந்து வருகின்றன. தீயணைப்பு படையின் பத்து பிரிவுகள் சம்பவ இடத்தை அடைந்துள்ளன. கோவிட் தடுப்பூசி உற்பத்தி ஆலை தீ விபத்து இல்லை என்று நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் உயிர் சேதம் எதுவும்…

மேலும்...

துரோகி அர்னாபை கைது செய் – தேசிய அளவில் ட்ரென்டிங்!

புதுடெல்லி (21 ஜன 2021): ரிபப்ளிக் தொலைக்காட்சி தலைமை ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமியை கைது செய்யக்கோரி #ArrestTraitorArnab என்ற ஹேஷ்டேக் தேசிய அளவில் டிவிட்டரில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 அன்று புல்வாமாவில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 40 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை அர்னாப் கோஸ்வாமி ரிபப்ளிக் டிவியின் டிஆர்பி மதிப்பீட்டிற்கு மட்டுமே முக்கியத்துவம் அளித்துள்ளார், என்று வெளியான அர்னாப் கோஸ்வாமியின் வாட்ஸ்அப் உரையாடல்கள் காட்டுகின்றன. பார்க்…

மேலும்...

கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொள்ளவுள்ள பிரதமர் மற்றும் மாநில முதல்வர்கள்!

புதுடெல்லி (21 ஜன 2021): கோவிட் தடுப்பூசி விநியோகத்தின் இரண்டாம் கட்டத்தின் போது பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மாநில முதல்வர்கள் கோவிட் தடுப்பூசி பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமரைத் தவிர, மாநில முதல்வர்களை தவிர 50 வயதுக்கு மேற்பட்ட அனைத்து எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் பிற அரசியல் தலைவர்களுக்கும் தடுப்பூசி போடப்படும் தெரிகிறது. கடந்த ஜனவரி 16 முதல் இந்தியாவில் விநியோகிக்கப்படும் தடுப்பூசிகள், சீரம் இன்ஸ்டிடியூட்டின் கோவிஷீல்ட் மற்றும் பாரத் பயோடெக்கின் கோவகோசின் ஆகியவை என்பது…

மேலும்...

சட்டசபையில் சுதந்திரப் போராளிகளின் படத்துடன் சாவர்க்கர் படம்!

லக்னோ (20 ஜன 2021): உத்திர பிரேதச சட்டசபையில் சுதந்திரப் போராளிகளின் படத்துடன் சாவர்க்கரின் படமும் நிறுவப்பட்டமைக்கு காங்கிரஸ், சமாஜ்வாடி காட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தொடர்பாக உத்தரபிரதேசத்தில் பெரும் எதிர்ப்பு வெடித்தது. சாவர்க்கரின் படம் உ.பி. சட்டசபை விதான் பரிஷத்தில் எடுக்கப்பட்டது. உபி சட்டசபையில் சாவர்க்கரின் படத்தை முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று வெளியிட்டார். இதனை அடுத்து சுதந்திரப் போராளிகளின் படத்துடன் சாவர்க்கரின் படமும் நிறுவட்டப்பட்டன. இந்த சம்பவத்திற்கு காங்கிரசும் சமாஜ்வாடி கட்சியும் கடும் எதிர்ப்பு…

மேலும்...

விவசாயிகள் போராட்டத்தைக் கைவிட வேண்டும் – உச்ச நீதிமன்றம்!

புதுடெல்லி(20/01/2021): விவசாய மசோதாக்களுக்கு எதிராகப் போராடி வரும் விவசாயிகள், தங்கள் போராட்டத்தைக் கைவிட்டு உச்ச நீதிமன்றம் அமைத்த குழு முன் ஆஜராக வேண்டும் என உச்ச நீதிமன்றம் வேண்டுகோள் விடுத்துள்ளது. மத்திய அரசு கொண்டுவந்த மூன்று விவசாய மசோதாக்களை முழுவதுமாக கைவிடக் கோரி விவசாயிகள் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை 10 முறை விவசாயிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையில் பேச்சு வார்த்தை நடந்தும் அனைத்தும் தோல்வியில் முடிந்துள்ளது. இந்நிலையில், விவசாய மசோதாக்களுக்குத் தடை கோரி திமுக…

மேலும்...

தேச பக்தர்கள் போர்வையில் தேச விரோதிகள் – அர்னாப் மீது விசாரணை நடத்த காங்கிரஸ் வலியுறுத்தல்!

புதுடெல்லி (20 ஜன 2021): ரிபப்ளிக் டிவி தலைமை ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமியின் வாட்ஸ் அப் உரையாடல் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. அர்னாப் மீதான டிஆர்பி மோசடி வழக்கின் விசாரணையின் போது பாலகோட் தாக்குதல் குறித்து அர்னாபுக்கு முன்கூட்டியே தெரிந்த விவகாரம் வெளி வந்தது. பாலகோட் தாக்குதல் குறித்து வெளியான அர்னாபின் வாட்ஸ் ஆப் உரையாடல் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேசிய பாதுகாப்பு தொடர்பான ரகசிய தகவல்களை அர்னாப்…

மேலும்...

இந்தியாவின் கொரோனா தடுப்பூசி குறித்து சுகாதார ஊழியர்கள் கவலை!

பெங்களூரு (20 ஜன 2021): இந்தியாவில் வழங்கப்படும் சோதனையின் கட்டம் முடிவடையாத கோவேக்சின் தடுப்பூசி குறித்து கர்நாடக அரசு மருத்துவர்கள் சங்கம் (கேஜிஎம்ஏ) கவலை தெரிவித்துள்ளது. இது குறித்து கே ஜி எம் ஏ, சுகாதார அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில், “தற்போது விநியோகிக்கப்படும் இரண்டு வகை தடுப்பூசிகளில் எது பாதுகாப்பானது என்பது குறித்து சுகாதார ஊழியர்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.” தெரிவித்துள்ளனர். மேலும், சோதனையின் கட்டத்தில் உள்ள தடுப்பூசி விநியோகம் சுகாதார ஊழியர்களிடையே சந்தேகத்தை எழுப்புவதாகவும், தற்போதைய தடுப்பூசி…

மேலும்...

கொரோனா தடுப்பூசி யாரெல்லாம் எடுத்துக்கொள்ளக் கூடாது? -பாரத் பயோடெக் விளக்கம்!

புதுடெல்லி (19 ஜன 2021): பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின் தடுப்பூசியை யார் பயன்படுத்தலாம், யார் பயன்படுத்தக்கூடாது என்பதற்கான வழிகாட்டுதல்கள் பாரத் பயோடெக் நிறுவனத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஒவ்வாமை உள்ளவர்கள் மருத்துவரை அணுகிய பின்னரே தடுப்பூசி போட வேண்டும்.  கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்கள் இந்தத் தடுப்பூசியை பயன்படுத்தக்கூடாது. மற்றொரு கோவிட் தடுப்பூசி பெற்றவர்கள் கோவாசின் எடுத்துக் கொள்ளக்கூடாது. தடுப்பூசி நாடு முழுவதும் விநியோகிக்கத் தொடங்கியதிலிருந்து தடுப்பூசி பெற்றவர்களில் சிலர், சில பக்கவிளைவுகளைச் சந்தித்ததாக வெளியான தகவல்களுக்கு…

மேலும்...