ஐக்கிய அரபு அமீரகத்தில் மஞ்சள் மற்றும் ஆரஞ்சு எச்சரிக்கை!

துபாய் (28 டிச 2022): ஐக்கிய அரபு அமீரகத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் மஞ்சள் மற்றும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மழை நேரத்தில் வெளியே செல்லும் போதும் வாகனம் ஓட்டும் போதும் கவனமாக இருக்குமாறு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். ஐக்கிய அரபு அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்தது. ஷார்ஜா அஜ்மான் ராஸ் அல் கைமாவில் காலை முதல் பலத்த மழை பெய்து…

மேலும்...

சவூதியில் பசுமை ரியாத் திட்டத்தின் மூலம் அதிக மரங்கள் நட முடிவு!

ரியாத் (28 டிச 2022): ரியாத்தில் விரிவான மர வளர்ப்பு திட்டத்தை செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. கிரீன் ரியாத்’ என்கிற இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, 6,23,000 மரங்கள் நடப்படுகின்றன. தோட்டங்கள், பள்ளிகள், மசூதிகள் மற்றும் 78 வாகன நிறுத்துமிடங்களில் மரங்கள் நட திட்டமிடப்பட்டுள்ளன. சர்வதேச தரத்தில் 120க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகளில் இத்திட்டம் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்துவதுடன், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு மற்றும் மரம் நடும் பிரச்சாரம் மேற்கொள்ளப்படும். இம்மாதம் 29ம் தேதி முதல் ஜனவரி…

மேலும்...

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள கொரோனா வழிகாட்டுதல்கள்!

புதுடெல்லி (28 டிச 2022): ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் செவ்வாயன்று ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து (யுஏஇ) இந்தியாவுக்குப் பயணிக்கும் பயணிகளின் கோவிட்-பாதுகாப்பு நடத்தை வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி அனைத்து பயணிகளும் தங்கள் நாட்டில் கோவிட்-19 க்கு எதிரான அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்று பரிந்துரை அறிவுறுத்துகிறது. பயணத்தின் போது எடுக்க வேண்டிய மற்ற முன்னெச்சரிக்கைகளில் முகமூடிகளின் பயன்பாடு மற்றும் உடல் இடைவெளி ஆகியவை அடங்கும். கோவிட் -19 க்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தியாவிற்கு…

மேலும்...

சவூதியில் ஆன்லைன் மூலம் வாகனம் பழுதுபார்க்கும் அனுமதி!

ரியாத் (28 டிச 2022): விபத்துக்குள்ளான வாகனத்தை பழுதுபார்ப்பதற்கான அனுமதியை ஆன்லைனில் பெறுவதை சவுதி அரேபியா எளிதாக்கியுள்ளது. வாகன பழுதுபார்ப்பு அனுமதியை அப்ஷர் இயங்குதளம் போர்டல் மூலம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. சவூதி அரேபியாவில் அதிகமான சேவைகளை மின்னணுமயமாக்குவதன் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விபத்து வாகனங்களை பழுதுபார்ப்பதற்கான அனுமதிகள் இனி அப்ஷர் இயங்குதளம் மூலம் வழங்கப்படும் வசதியைப் பயன்படுத்தி, அதில் உள்ள மூன்று படிகளை முடிக்க வேண்டும் என்று அப்ஷர் சேவைத் துறை தெரிவித்துள்ளது….

மேலும்...

தாயின் ஆசையை நிறைவேற்றிய விமானி அமீர் ரஷீத்!

ரியாத் (28 டிச 2022): பல வருடங்களுக்குப் பிறகு தாயின் வாழ்நாள் ஆசையை நிறைவேற்றிய மகனின் சமூக வலைதள பதிவு இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. அமீர் ரஷீன் வானி என்கிற விமானி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதில் “புனித மக்காவிற்கு செல்ல வேண்டும் என்பது எனது பள்ளிப் பருவத்திலிருந்தே தனது தாயின் ஆசையாக இருந்தது, அதனை நான் இயக்கும் விமானத்திலேயே அழைத்துச் சென்று தற்போது நிறைவேற்றியுள்ளேன்” என்று பதிவிட்டுள்ளார். மேலும் அமீரின் ட்வீட்டில்,…

மேலும்...

சவூதியில் பனிப்பொழிவு – வெப்ப நிலையில் மாற்றம்!

ரியாத் (27 டிச 2022): சவுதி அரேபியாவின் பெரும்பாலான பகுதிகளில் வெப்பநிலை குறையத் தொடங்கியுள்ளது. நாட்டின் வடக்கு, கிழக்கு மற்றும் மத்திய பிரதேசங்களில் வெப்பநிலை குறையத் தொடங்கியுள்ளது. சவூதி அரேபியாவின் வடக்கு எல்லையில் உள்ள ஜபல் அல்-லூஸ், அலகான் அல்-தார், அரார், துரைஃப், அல்-ஹசம், அல்-ஜலாமித் உள்ளிட்ட தபூக் பகுதியில் உள்ள மலைப்பகுதிகளில் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் பனிப்பொழிவு ஏற்பட வாய்ப்புள்ளது. அல் ஜூஃப் மாகாணத்தில் உள்ள குராயத் பகுதியிலும் பனிப்பொழிவு ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த ஆண்டு…

மேலும்...

21ஆம் நூற்றாண்டின் சிறந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டி- கத்தாருக்கு முதலிடம்!

தோஹா: 21ம் நூற்றாண்டின் சிறந்த கால்பந்து உலகக் கோப்பை போட்டியை நடத்தியதில் கத்தார் முதலிடம் பிடித்துள்ளது. 2002 முதல் 2022 வரையிலான கால்பந்து உலகக்கோப்பை போட்டிகள் குறித்து உலகெங்கிலும் உள்ள கால்பந்து ரசிகர்கள் மத்தியில் பிபிசி நடத்திய கருத்துக்கணிப்பில் கத்தார் முதலிடம் பிடித்தது. இந்த நூற்றாண்டின் சிறந்த உலகக் கோப்பை கணக்கெடுப்பில், பதிலளித்தவர்களில் 78 சதவீதம் பேர் கத்தாருக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். இரண்டாவது இடம் ஜப்பானும் கொரியாவும் இணைந்து நடத்திய உலகக் கோப்பை போட்டியாகும். 2014-ம் ஆண்டு…

மேலும்...

இந்தியா – சவுதி வர்த்தகம் அதிகரிப்பு!

ரியாத் (27 டிச 2022): இந்தியா – சவுதி வர்த்தகம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வருடம் 67 சதவீத அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சீனா, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகியவை சவுதி அரேபியாவின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளிகளாக கருதப்படுகின்றனர். இந்த ஆண்டு ஜனவரி முதல் அக்டோபர் இறுதி வரையிலான பத்து மாதங்களில் சவூதி-இந்திய வர்த்தகம் 16,820 கோடி ரியாலாக அதிகரித்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. சவுதி அரேபியாவின் இரண்டாவது பெரிய வர்த்தக கூட்டாளியாக இந்தியா உள்ளது. கடந்த ஆண்டு இதே…

மேலும்...

சவூதி பாலைவனத்தில் திக்கற்ற நிலையில் சிக்கித்தவித்த 35 இந்தியர்கள் மீட்பு!

ரியாத் (26 டிச 2022): சவூதி அரேபியாவில் பாலைவனத்தில் திக்கற்ற நிலையில் பரிதாபமாக வாழ்ந்த 35 இந்தியர்கள் மீட்கப்பட்டனர்.ன் சமூக ஆர்வலர்களும், இந்திய தூதரகமும் இணைந்து முப்பத்தைந்து இந்தியர்களை மீட்க வழிவகை செய்தது. மீட்கப்பட்டவர்களில் 31 பேர் சட்டப்பூர்வ நடைமுறைகளை முடித்து இந்தியாவிற்கு அனுப்பப்பட்டனர். மீதமுள்ள 3 பேர் விரைவில் இந்தியா அனுப்படவுள்ளனர். ஒருவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். 35 பேரும் கத்தாரில் வேலை வாய்ப்பு விசாவில் கத்தாருக்கு வந்துள்ளனர். பின்னர் ஸ்பான்சர் சவுதிக்கு விசிட் விசாக்களை…

மேலும்...

சவூதியில் அதிகரிக்கும் உள் நாட்டு சுற்றுலா பயணிகள்!

ரியாத் (26 டிச 2022): சவுதி அரேபியாவில் உள்நாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சுற்றுலாத்துறையின் புதிய திட்டங்களால் வெளிநாடுகளுக்குச் செல்வோர் எண்ணிக்கை குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த ஆண்டு இதுவரை, 32 மில்லியனுக்கும் அதிகமான உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் சவுதியில் உள்ளா சுற்றுலா இடங்களுக்குச் சென்றுள்ளனர். 2015ஆம் ஆண்டை விட கடந்த ஆண்டு சவூதி அரேபியாவில் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 37 சதவீதம் அதிகரித்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு 64 மில்லியன் சுற்றுலாப்…

மேலும்...