சீன தூதுவருடன் ராகுல் காந்தி ரகசிய சந்திப்பு – பாஜக பகீர் குற்றச்சாட்டு!

452

புதுடெல்லி (26 ஜூன் 2020): கடந்த 2017 ஆம் ஆண்டு டெல்லியில், இந்தியாவிற்கான சீன தூதரை, ராகுல் காந்தி ரகசியமாக சந்தித்து பேசியதாக பாஜக, தலைவர் ஜேபி நட்டா தெரிவித்துள்ளார்

இது தொடர்பாக வீடியோ கான்பரன்ஸ் முறையில் நட்டா பேசியதாவது: கடந்த 2017 ம் ஆண்டில், டோக்லாமில் இந்தியா – சீனா படைகள் நேருக்கு நேர் சந்தித்து கொண்டன. அப்போது, டெல்லியில், இந்தியாவிற்கான சீன தூதரை, ராகுல் ரகசியமாக சந்தித்தார்.

இதைப் படிச்சீங்களா?:  தமிழக பாஜகவில் விரைவில் அதிரடி மாற்றங்கள் - கலக்கத்தில் பெரிய தலைகள்!

மேலும் கடந்த 2005 – 06 ம் ஆண்டில், சீனாவும் சீன தூதரகமும், ராஜிவ் அறக்கட்டளைக்கு 300 ஆயிரம் அமெரிக்க டாலர் நிதி வழங்கியுள்ளது. இது தான் காங்கிரஸ் மற்றும் சீனா இடையே ரகசிய ஒப்பந்தம். இவ்வாறு அவர் கூறினார்.

தற்போதும் கல்வானில் நடந்த மோதலின் போதும், நாட்டை காங்கிரஸ் தவறாக வழிநடத்துகிறது.

இவ்வாறு நட்டா தெரிவித்துள்ளார்.