இந்த மூன்றையும் முறையாக கடைபிடியுங்கள் – கொரோனா உங்களை நெருங்காது!

4969

சிகாகோவின் இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தின் அறுவை சிகிச்சை பேராசிரியராகவும் தொற்று நோய் மற்றும் பொது சுகாதாரத்தில் நிபுணராக இருக்கும் டாக்டர் விஜய் யெல்டாண்டி வைரஸ் நம்மை நெருங்காமல் இருக்க மூன்று முக்கிய வழிமுறைகளை பின்பற்ற வேண்டி வலியுறுத்தியுள்ளார்.

இடைவெளி – Social Distance:

கொரோனா வைரஸ் காற்றிலும் பரவும் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். யாராவது இருமும்போது அல்லது தும்மும்போது, நீர்த்துளிகள் காற்றில் பரவுகின்றன. இந்த நீர்த்துளிகள் 3-4 அடி தூரத்திற்குள் கீழே விழுகின்றன. ஆகையால், நோய்வாய்ப்பட்ட நபருடன் 3 அடி தூரத்தை நாம் பராமரிக்க வேண்டும், இதனால் வைரஸ் நமக்கு எட்டும் வாய்ப்பு குறைவு.

முகக்கவசம் – Mask

இரண்டாவதாக, நாம் மூக்கு மற்றும் முகத்தை முகமூடியால் மறைக்க வேண்டும். முகமூடிகள் எளிதில் கிடைக்காவிடிலும், அதற்கு பதிலாக நாம் ஒரு சுத்தமான துணியைப் பயன்படுத்தலாம். உலக சுகாதார அமைப்பும் (WHO) சமீபத்தில் வைரஸ் 8 மணி நேரம் காற்றில் பறந்துகொண்டு இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது. எனவே, முகமூடியின் பயன்பாடு அவசியம்.

நம் உடலையும், நாம் உபயோகிக்கும் இடங்களையும் சுத்தமாக வைத்துக் கொள்ளுதல்:

இந்த வைரஸ் நம் கைகளில் இலகுவாக ஒட்டிக்கொளும். எனவே, நாம் சோப்பை உபயோகப்படுத்தி கைகளை முழுமையாகவும் அடிக்கடி கழுவ வேண்டும்.

மேலும் யாராவது இருமல் அல்லது தும்மினால் நீர்த்துளிகள் சுற்றுப்புறத்தில் கீழே விழுந்து 3-4 நாட்களில் அங்கேயே இருக்கும். எனவே, சுற்றுப்புறங்களை சோப்பு அல்லது 70% ஆல்கஹால் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.

1918 ஸ்பானிஷ் காய்ச்சல் தொற்றுநோயிலும், 1950 இன் போலியோ தொற்றுநோயிலும், மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள் இல்லை. எனவே, இந்த தொற்றுநோய்கள் இந்த எளிதான முறைகள் மூலம் கட்டுப்படுத்தப்பட்டன.