இந்தியா ஃபிரட்டெர்னிடி ஃபோரம் நடத்திய இரத்ததான முகாம்.

335

ஜித்தா (10 ஜூலை 2020): சவுதி அரேபியா ஜித்தா நகரிலுள்ள மன்னர் அப்துல் அஜீஸ் பல்கலைகழக மருத்துவமனையின் வேண்டுகோளுக்கிணங்க இந்தியா ஃபிரட்டெர்னிடி ஃபோரம் மேற்கு மாகாண கமிட்டியின் சார்பாக இரத்தானம் வழங்கப்பட்டது.

கொரனா தொற்றாளர்களுக்கு இரத்தம் ஏற்றவேண்டிய தேவை அதிகரித்து வரும் சூழலில் மன்னர் அப்துல் அஜீஸ் பல்கலைகழக மருத்துவமனையின் நிர்வாகி டாக்டர் முஹன்னது அவர்கள் ஃபோரத்தின் நிர்வாகிகளிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார். இதன் அடிப்படையில் கடந்த 3.7.20 அன்று மாலை ஃபிரட்டெர்னிடி ஃபோரத்தின் உறுப்பினர்கள் 36 யுனிட் இரத்தம் வழங்கினர்.

இதனை ஃபோரத்தின் மேற்கு மாகாணத்தலைவர் பைசுத்தீன் அவர்கள் இரத்தம் வழங்கி தொடங்கிவைத்தார். 36க்கும் அதிகமான உறுப்பினர்கள் கலந்துகொண்டு இரத்தம் வழங்கினர்.

நிறைவாக மன்னர் அப்துல் அஜீஸ் பல்கலைகழக மருத்துவமனை நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் ஃபிரட்டெர்னிடி ஃபோரத்தின் உறுப்பினர்களுக்கு தங்களது நன்றியினை தெரிவித்தார்கள்.