சவூதி அரேபியாவில் வசிப்பவர்களுக்கு மட்டும் குறைந்த எண்ணிக்கையில் ஹஜ் யாத்திரைக்கு அனுமதி!

1047

ரியாத் (22 ஜூன் 2020): சவூதி அரேபியாவில் வசிக்கும் அனைத்து உள்நாட்டு வெளிநாட்டினருக்கு மட்டும் குறிப்பிட்ட அளவில் இவ்வருடம் (2020) ஹஜ் யாத்திரைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

திங்களன்று இதுகுறித்து ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவல் காரணமாக இவ்வாண்டு (2020 – 1441) வெளிநாட்டு ஹஜ் யாத்திரீகர்களுக்கு அனுமதி இல்லை .எனினும் உள் நாட்டில் வசிக்கும் குறைந்த அளவிலான யாத்ரீகர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படுகிறது.” என்று தெரிவிக்கப்படுள்ளது.

மேலும் கொரோனா வைரஸ் காரணமாக அதிக அளவில் மக்கள் கூடுவதை தவிர்க்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: https://saudigazette.com.sa/