இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் விஸ்வரூப உயர்வு!

புதுடெல்லி (08 ஜூன் 2020): கொரோனா வைரஸ் பாதிப்பு இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 9,983 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் அசுர வேகத்தில் பரவி வருகிறது. இந்தியாவில் மொத்த நாவல் கொரோனா வைரஸ் வழக்குகளின் எண்ணிக்கை 2,56,611 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 7,135 ஐ எட்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், திங்கள்கிழமை காலை முடிவடைந்த நிலையில், இந்தியாவில் கொரோனா வைரஸால் 9,983 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தைப்…

மேலும்...

கொரோனா மோசமாக பாதித்த உலகின் ஐந்தாவது நாடானது இந்தியா!

புதுடெல்லி (07 ஜூன் 2020): இந்தியா கொரோனா மோசமாக பாதித்த ஐந்தாவது நாடாக மாறியுள்ளது. கொரோனா உலக அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக இந்தியா இப்போது 2,46,628 நாவல் கொரோனா வைரஸ் வழக்குகளுடன், ஐந்தாவது மோசமான நாடாக மாறியுள்ளது, இதன் மூலம் ஸ்பெயினின் எண்ணிக்கையை முந்தியுள்ளது. சமீபத்திய சுகாதார அமைச்சின் தரவுகளின்படி, நாட்டில் இறந்தவர்களின் எண்ணிக்கை 6,929 ஆக உள்ளது. எவ்வாறாயினும், உணவகங்கள், வணிக…

மேலும்...

ஜெய் ஸ்ரீராம் என கூற மறுத்த வாலிபர் மீது பஜ்ரங்தள் அமைப்பினர் கொடூர தாக்குதல்!

பாட்னா (06 ஜூன் 2020): ஜெய்ஸ்ரீராம் என்று கூற மறுத்த 18 வயது வாலிபர் மீது பஜ்ரங்தள் அமைப்பை சேர்ந்த சிலர் கொடூரமாக தாக்குதல் நடத்தியுள்ளனர். கொரோனாவின் கோரத்தாண்டவம், வடமாநிலங்களை தாக்கிய புயல், பொருளாதார நெருக்கடி என நாடே நிலைகுலைந்து போயுள்ள நிலையில் மதவெறி வன்முறையும் சேர்ந்து நாட்டிற்கு பெரிய சவாலாக அமைந்துள்ளது. இந்நிலையில் பீகார் மாநிலம் மோதிஹரி நகரில் 18 வயது முஹம்மது இஸ்ரேல் என்ற வாலிபரை ஜெய் ஸ்ரீராம் என கூற வலியுறுத்தி சில…

மேலும்...

லடாக் எல்லை பிரச்சனை குறித்து இந்தியா சீனா முதல் கட்ட பேச்சுவார்த்தை நிறைவு!

புதுடெல்லி (06 ஜூன் 2020): லடாக் எல்லை பிரச்சனை தொடர்பாக இந்தியா-சீனா ராணுவ அதிகாரிகள் இடையேயான முதல் கட்ட பேச்சுவார்த்தை நிறைவு பெற்றது. லடாக்கின் எல்லை பகுதியில் கடந்த மே 5 மற்றும் 6-ம் தேதிகளில் இந்திய ராணுவ படையினருக்கும் சீன ராணுவ படையினருக்கும் சிறிய அளவில் பிரச்னை ஏற்பட்டது. இதில் 150 வீரர்கள் காயமடைந்தனர். இதைத் தொடர்ந்து பிரச்னை தொடங்கிய இடமான பாங்காங் டிசோ ஏரியில் இருந்து 200 கி.மீ. தொலைவில் உள்ள நகரி குன்சா…

மேலும்...

2020 புனித ஹஜ் பயணம் பற்றிய இந்திய ஹஜ் கமிட்டி முக்கிய அறிவிப்பு

புதுடெல்லி (06 ஜூன் 2020): கொரோனா நோய் தொற்று காரணமாக 2020ஆம் ஆண்டுக்கான புனித ஹஜ் பயண ஏற்பாடுகளை விருப்பமானவர்கள் ரத்து செய்து கொள்ள இந்திய ஹஜ் கமிட்டி அறிவுறுத்தியுள்ளது இவ்வாண்டுக்கான ஹஜ் பயண ஏற்பாடுகள் செய்வதற்கு இன்னும் ஐந்து வாரங்களே உள்ள நிலையில் சௌதி அரேபியா அரசாங்கத்திடமிருந்து எவ்வித உறுதியான தகவல்கள் கிடைக்கப் பெறாத காரணத்தினால் இவ்வாண்டுக்கான ஹஜ் யாத்திரையை ரத்து செய்து கொள்ள வழிகாட்டப்பட்டுள்ளது ஹஜ் பயணத்திற்கு தேர்வு செய்யப்பட்டு பணம் செலுத்தியவர்கள் தாங்கள்…

மேலும்...

இந்தியாவில் அமைதி காக்கும் சுகாதாரத்துறை அமைச்சகம் – காரணம் ஏன்?

புதுடெல்லி (04 ஜூன் 2020): இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் சுகாதாரத்துறை அமைச்சகம் கடந்த 8 நாட்களாக ஒரு ஊடக சந்திப்பைக் கூட நடத்தவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தியாவில் கோவிட் 19 பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது அதேவேளைல் இந்தியாவில் கோவிட் -19 தொடர்பான இறப்புகளின் எண்ணிக்கை மற்ற நாடுகளை விட மிகக் குறைவு என்றாலும், உலகளாவிய சூழ்நிலையில் இந்தியா ஒரு வளர்ந்து வரும் கோவிட் -19…

மேலும்...

உலக நன்மைக்காக இந்தியா- ஆஸ்திரேலியா இணைந்து பணியாற்ற வேண்டும் – பிரதமர் மோடி!

புதுடெல்லி (04 ஜூன் 2020): இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான உச்சி மாநாடு இன்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் காணொலி காட்சி மூலம் பங்கேற்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மோரிசனுடன் ஆலோசனை நடத்தினார். மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் மோடி, கொரோனா வைரஸ் உலகின் ஒவ்வொரு பகுதிகளையும் பாதித்துள்ளது. கொரோனா பாதிப்பு நிலைமை சீரடைந்தவுடன் குடும்பத்துடன் ஆஸ்திரேலிய பிரதமர் இந்தியா வர வேண்டும் என்றார். மேலும், ஆஸ்திரேலியாவுடனான உறவை வலுப்படுத்த இந்தியா விரும்புகிறது. இந்தியா-ஆஸ்திரேலியா உறவு மிகவும்…

மேலும்...

ஒரே நாளில் 260 பேர் பலி – இந்தியாவை அதிர வைக்கும் கொரோனா வைரஸ்!

புதுடெல்லி (045 ஜூன் 2020): இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு 2 லட்சத்து 16 ஆயிரத்தை தாண்டியது. ஒரே நாளில் 260 பேர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் காட்டுத்தீ போல பரவி வருகிறது. ஆட்கொல்லி கொரோனா வைரஸால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,16,919 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 9304 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 260 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. கொரோனாவால் இதுவரை…

மேலும்...

விஜய் மல்லையா நாடு கடத்தப்பட்டது உண்மையா?

புதுடெல்லி (04 ஜூன் 2020): மோசடி மன்னன் விஜய் மல்லையா இந்தியா அனுப்பப்பட்டதாக வெளியான தகவலை இங்கிலாந்து மறுத்துள்ளது. வங்கி மோசடி செய்துவிட்டு லண்டனில் வசித்து வரும் விஜய் மல்லையா, நேற்றிரவு மும்பை கொண்டு வரப்பட்டதாக தகவல்கள் பரவின. அங்குள்ள ஆர்தர் சாலை சிறையில் அவர் அடைக்கப்பட்டதாகவும் செய்திகள் உலா வந்தன. ஆனால், இதனை மல்லையாவின் வழக்கறிஞர் திட்டவட்டமாக மறுத்துள்ளார். பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட 17 வங்கிகளில் ரூ.9,961 கோடி கடன் ஏய்ப்பு செய்துவிட்டு லண்டனுக்கு…

மேலும்...

இந்தியா கொண்டு வரப்பட்டார் விஜய் மல்லையா – ஆர்தர் ரோடு சிறையில் அடைப்பு!

மும்பை (04 ஜூன் 2020): இந்தியா கொண்டுவரப்பட்ட விஜய் மல்லையா மும்பையில் உள்ள ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் உள்ள 17 வங்கிகளில் 9,000 கோடி கடன் வாங்கி தொழிலதிபர் விஜய் மல்லையா, இங்கிலாந்துக்கு தப்பிச் சென்று லண்டனில் தஞ்சம் புகுந்தார். அவருக்கு எதிராக சி.பி.ஐ., அமலாக்கத்துறை ஏஜென்சிகள் மோசடி வழக்குகள் பதிவு செய்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. லண்டனில் தஞ்சம் புகுந்த விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்தி கொண்டு வர சி.பி.ஐ. தீவிர…

மேலும்...