அதிமுகவில் அதிரடி மாற்றங்கள் – சிபாரிசுகளுக்கு இடமில்லை!

சென்னை (28 மே 2020): அதிமுகவில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வர அக்கட்சியின் தலைமை தீர்மானித்துள்ளது. இதன் முதல் நடவடிக்கையாக, ஊராட்சி செயலாளர்கள் பதவி ரத்து என்ற அறிவிப்பு கடந்த வாரம் வெளியிடப்பட்டது. இப்போது மாவட்டச் செயலாளர்களை மாற்றம் செய்வது குறித்து அடுத்தக் கட்ட நடவடிக்கை அமையவுள்ளது. இதற்கான புதிய பட்டியலும் தயார் நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. எதிர் வரும் சட்டமன்ற தேர்தலை கவனத்தில் கொண்டு தொகுதிகளில் அதிக துடிப்புடன் உள்ளவர்களை கவனத்தில் கொண்டே பதவிகள் வழங்கப்படும்…

மேலும்...

துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மருத்துவமனையில் அனுமதி!

சென்னை (25 மே 2020): அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாட்டின் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று சென்னையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் நேற்றிரவு சென்னை தனியார் மருத்துவமனையில் துணை முதல்வர் திடீரென அனுமதிக்கப்பட்டார்.. ஆஞ்சியோ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகின. டாக்டர்கள் அவருக்கு தீவிர பரிசோதனைகளை மேற்கொண்டனர். நேற்றிரவு ஆஞ்சியோ சிகிச்சை முடிந்த நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மருத்துவமனைக்குச் சென்று துணை முதல்வரை நேரில் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தார்.. ஓ.பி.எஸ் மருத்துவமனையில் அனுமதித்துள்ள…

மேலும்...

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதவி பறிப்பு!

சென்னை (22 மார்ச் 2020): அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விருதுநகர் மாவட்டச் செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். பால் வளத் துறை அமைச்சராக உள்ள ராஜேந்திர பாலாஜி, விருதுநகர் மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் அறிவித்துள்ளனர். ராஜேந்திர பாலாஜி அதிமுகவில் இருந்தபோதும் அவ்வப்போது பாஜகவினரையே விஞ்சும் அளவுக்கு பாஜக ஆதரவு கருத்துக்களை பேசி வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும்...

பத்தாவது பட்ஜெட் யாருக்கும் பத்தாத பட்ஜெட் – ஸ்டாலின் விமர்சனம்!

சென்னை (14 பிப் 2020): துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வாசித்த பட்ஜெட் யாருக்கும் பத்தாத பட்ஜெட் என்று திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் 2020-2021ம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் உரையாற்றினார். இந்த பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஸ்டாலின், ” சபாநாயகர் ஏன் 11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கூடாது என்று உச்சநீதிமன்றம் கேள்வியெழுப்பி இருக்கிறது. அந்த 11 பேரில் ஒருவராக இருக்கக்கூடிய ஓ.பன்னீர்செல்வம்…

மேலும்...

தமிழக பட்ஜெட்டின் (2020) முக்கிய அம்சங்கள்!

சென்னை (14 பிப் 2020): 2020- 21ம் நிதியாண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டை தமிழக துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் இன்று வெளியிட்டார். பொருளாதார நெருக்கடிகளை தமிழக அரசு திறமையாக சமாளித்து வருகிறது. கல்வித் துறைக்கு ரூ.34,841 கோடி ரூபாய் ஒதுக்கீடு. 11 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க ரூ.1200 கோடி ஒதுக்கீடு திருந்திய நெல்சாகுபடி முறை 27.18 லட்சம் ஏக்கர் பரப்பளவுக்கு விரிவுபடுத்தப்படும். தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 7.27% ஆக இருக்கும்…

மேலும்...

துணை முதல்வர் ஓபிஎஸ்ஸிடம் வாங்கிக் கட்டிக் கொண்ட ரஜினி!

சென்னை (22 ஜன 2019): தந்தை பெரியார் குறித்து முழுமையாக தெரிந்து பேச வேண்டும் என்று ரஜினிக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். துக்ளக் விழாவில் பேசிய ரஜினி, “1971 சேலத்தில் பெரியார் அவர்கள், ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி சிலையை உடையில்லாமல் செருப்பு மாலை போட்டு ஊர்வலமா எடுத்துட்டுப்போனாரு” என்று பேசியிருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டும் என கோரினர்….

மேலும்...