காங்கிரஸ் எதிர் கட்சியாகத்தான் இருக்கும் – காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் பகீர் கருத்து!

புதுடெல்லி (30 ஆக 2020): காங்கிரசுக்‍கு புதிய தலைவரை தேர்வு செய்யாவிட்டால், அடுத்த 50 ஆண்டுகளுக்‍கு எதிர்க்‍கட்சியாகத்தான் இருக்‍க வேண்டும் என அக்‍கட்சியின் மூத்த தலைவர் திரு. குலாம்நபி ஆசாத் கூறியுளளார். காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தி தேர்வு செய்யப்பட்டால், தாம் பெரும் மகிழ்ச்சியடைவேன் என்றும், புதிய தலைவரை தேர்வு செய்யாவிட்டால், அடுத்த 50 ஆண்டுகளுக்‍கு எதிர்க்‍கட்சியாகத்தான் இருக்‍க வேண்டும் என்றும் திரு. குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார். குலாம் நபி ஆசாத்தின் இந்த கருத்து காங்கிரஸ் கட்சியினரிடையே…

மேலும்...

காங்கிரஸ் எம்.பி.வசந்தகுமார் கொரோனா பாதிப்பால் மரணம்!

சென்னை (28 ஆக 2020): கொரோனா பாதித்த காங்கிரஸ் எம்பி வசந்தகுமார் சென்னையில் உயிரிழந்தார். கொரோனா தொற்றுக்கு ஆளாகியிருந்த நங்குநேரி வசந்தகுமார் எம்.பி. கடந்த 10 ஆம் தேதி, சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், கடந்த சில நாட்களாக அவரின் உடல்நிலை மோசமானதையடுத்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இன்று அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்ததையடுத்து சிகிச்சை பலனின்றி அவர் இன்று (ஆகஸ்ட் 28 ) உயிரிழந்தார். காங்கிரஸ்…

மேலும்...
Sonia Rahul

தலைவரைத் தேர்ந்தெடுக்காமலேயே முடிவுற்றது காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டிக் கூட்டம்!

(புது தில்லி ஆக. 24 2020:)கடந்த 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்குக் கிடைத்த படுதோல்வியைத் தொடர்ந்து, தனது கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் ராகுல் காந்தி. பின்னர் அக்கட்சியின் இடைக்காலத் தலைவராக பொறுப்பேற்றார், சோனியா காந்தி அவர் பொறுப்பேற்றும் ஓராண்டு கடந்துவிட்டது. இதனால் தற்போது, கட்சிக்குத் யார் தலைவர் எனும் விவாதம் வலுப்பெற ஆரம்பித்தது. இற்கிடையே, கட்சித் தலைமையின் சீர்திருத்தங்கள் நாடி சில மூத்த காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்திக்குக் கடிதம் எழுதியதாக…

மேலும்...

காங்கிரஸ் தலைவர் யார்? – சோனியா காந்தி பின்வாங்கல்!

புதுடெல்லி (24 ஆக 2020): காங்கிரஸ் இடைக்கால தலைவராக தொடர விருப்பமில்லை என்று தற்போதைய தலைவர் சோனியா காநதி தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்ததை தொடர்ந்து, கட்சி தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி விலகினார். இதைத்தொடர்ந்து, சோனியா காந்தி கட்சியின் இடைக்கால தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியில் முக்கிய முடிவுகளை எடுக்கும் அதிகாரம் பெற்ற காரிய கமிட்டி இன்று காலை 11 மணிக்கு காணொலி காட்சி…

மேலும்...

காங்கிரஸ் முன்னாள் நிர்வாகிக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நிதியுதவி!

சென்னை (19 ஆக 2020): தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் துணைத் தலைவரும், மேடைப் பேச்சாளருமான வாய்ச்சவடால்’ குருசாமிக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ரூ 1 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். 78 வயதான வாய்ச்சவடால்’ குருசாமி, முதுமையின் காரணமாக உடல்நல பாதிப்புக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவச் செலவுகளைச் சமாளிக்க முடியாத அவரது தற்போதைய நிலையை, அவர் வசித்துவரும் சித்துராஜபுரம் பகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகிகள், தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியின் கவனத்துக்குக் கொண்டு சென்றனர்….

மேலும்...

இராஜஸ்தான் நெருக்கடி..? பரிதவிப்பில் பா.ஜ.க., குழப்பத்தில் காங்கிரஸ்!

ஜெய்ப்பூர் (15 ஜூலை 2020): “பா.ஜ.க.-வுக்கு தாவப் போகின்றார், தனிக்கட்சி தொடங்கப் போகின்றார்” என்று கடந்த த்திலிருந்து தலைப்புச் செய்திகளில் அடிபட்டு வரும் இராஜஸ்தான் மாநில துணை முதல்வர் சச்சின் பைலட் அப்பதவியிலிருந்து நீக்கபட்டுள்ளார். அதுமட்டுமல்ல மாநில காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்தும் நீக்கப்பட்ட அவருக்குப் பதிலாக கோவிந்த் சிங் தோஸ்தரா நியமிக்கப்பட்டுள்ளார். இதற்குப் பதிலடியாக தனது ட்விட்டர் பக்கத்தில் ‘உண்மைக்கு சங்கடங்கள் ஏற்படுத்தலாம், ஆனால் அதனை தோற்றகடிக்க இயலாது’ என்று பதிவிட்டுள்ளார் சச்சின். பைலட்டு-க்கு ஆதரவாக 30…

மேலும்...

மோடி, அமித்ஷா நண்பர்கள் என் வீட்டுக்கு வந்தார்கள் – காங்கிரஸ் மூத்த தலைவர் அஹமது பட்டேல் பரபரப்பு குற்றச்சாட்டு!

புதுடெல்லி (27 ஜூன் 2020): சீனப்படைகளின் இந்திய ஆக்கிரமிப்பு, மற்றும் கொரோனாவை தடுப்பதில் தோல்வி ஆகியவற்றை திசை திருப்பவே மோடி அரசு என்னிடம் அமலாக்கத்துறை விசாரணையை ஏவி விட்டுள்ளது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் அஹமது பட்டேல் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் மோடி மற்றும் அமித்ஷாவின் நண்பர்கள் என் வீட்டுக்கு வந்து என்னிடம் விசாரணை மேற்கொண்டனர். என்றும் அஹமது பட்டேல் தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம், வதோதராவை மையமாக வைத்து செயல்பட்டு வரும், ‘ஸ்டெர்லிங் பயோடெக்’ என்ற மருந்து…

மேலும்...

மணிப்பூர் அரசியலில் திடீர் திருப்பம்!

இம்பால் (26 ஜூன் 2020): மணிப்பூர் அரசியலில் திடீர் திருப்பமாக தேசிய மக்கள் கட்சி எம்எல்ஏ.க்கள் நால்வரும், மீண்டும் முதல்வர் பிரேன் சிங்கிற்கே ஆதரவு அளித்துள்ளனர். மணிப்பூரில் கடந்த 2017 தேர்தலில் தேசிய மக்கள் கட்சி (என்பிபி) உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் பாஜ கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தது. இந்நிலையில், பாஜக எம்எல்ஏ.க்கள் மூன்று பேர், என்பிபி கட்சியை சேர்ந்த 3 அமைச்சர்கள், எம்எல்ஏ உள்பட 9 பேர் முதல்வர் பிரேன் சிங்குக்கு அளித்து வந்த ஆதரவை…

மேலும்...

சீன தூதுவருடன் ராகுல் காந்தி ரகசிய சந்திப்பு – பாஜக பகீர் குற்றச்சாட்டு!

புதுடெல்லி (26 ஜூன் 2020): கடந்த 2017 ஆம் ஆண்டு டெல்லியில், இந்தியாவிற்கான சீன தூதரை, ராகுல் காந்தி ரகசியமாக சந்தித்து பேசியதாக பாஜக, தலைவர் ஜேபி நட்டா தெரிவித்துள்ளார் இது தொடர்பாக வீடியோ கான்பரன்ஸ் முறையில் நட்டா பேசியதாவது: கடந்த 2017 ம் ஆண்டில், டோக்லாமில் இந்தியா – சீனா படைகள் நேருக்கு நேர் சந்தித்து கொண்டன. அப்போது, டெல்லியில், இந்தியாவிற்கான சீன தூதரை, ராகுல் ரகசியமாக சந்தித்தார். மேலும் கடந்த 2005 – 06…

மேலும்...

நாங்கள் பாஜக பக்கம் இருக்கிறோம்: ஸ்டாலின் – கொந்தளிப்பில் காங்கிரஸ்!

புதுடெல்லி (21 ஜூன் 2020): இந்திய சீனா எல்லை விவகாரத்தில் மத்திய அரசை விமர்சித்து வரும் காங்கிரஸுக்கு திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் ஆதரவளிக்கவில்லை என்பதால் காங்கிரஸ் கட்சி கடும் கொந்தளிப்பில் உள்ளதாக கூறப்படுகிறது.. லடாக் கிழக்கு எல்லையில் கால்வன் பள்ளத்தாக்கை கைப்பற்ற சீனா முயற்சித்தது. இதை இந்திய வீரர்கள் முறியடித்தனர். இம்மோதலில் மொத்தம் 20 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். சீனா தரப்பில் 43 பேர் பலியாகி உள்ளதாக கூறப்படுகிறது. இவ்விவகாரம் இந்தியர்களிடையே அதிர்ச்சியை…

மேலும்...