கோவையில் அதிர்ச்சி – கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் மரணம்!

கோவை (17 மார்ச் 2020): கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்ட தாய்லாந்து இளைஞர் உயிரிழந்துள்ளார். தாய்லாந்து நாட்டில் இருந்து தமிழகத்துக்கு 7 பேர் கொண்ட குழு சுற்றுலா வந்தது. அந்த குழு தாய்லாந்து திரும்பிச் செல்ல இருந்த நிலையில் இவர்களில் டான் ரோசாக் என்பவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அவருக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பதாக கூறிய கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் அவரை கொரோனா வார்டில் அனுமதித்தனர். மேலும் அவருக்கு சிறுநீரக பிரச்சனையும்…

மேலும்...

கோவை ஷஹீன் பாக் போராட்டம் தற்காலிக நிறுத்தம்!

கோவை (12 மார்ச் 2020): கோவை ஷஹீன்பாக் போராட்டம் 5 நாட்களுக்கு தாற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நாடெங்கும் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் டெல்லி ஷஹீன் பாக் போராட்டம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. இதன் ஸ்டைலில் நாடெங்கும் பெண்கள் முன்னிலையில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கோவை ஆத்துப்பாலம் இஸ்லாம் ஷாஃபி ஜமாத் மசூதி மைதானத்திலும் ஷஹீன்பாக் ஸ்டைலில் கடந்த 23 நாட்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் போராட்டம் நடைபெறும் பகுதி…

மேலும்...

பட்டப்படிப்பு பயின்றாலும் துப்புரவு பணி செய்வதில் மகிழ்ச்சி – நெகிழ வைக்கும் மாணவி!

கோவை (07 மார்ச் 2020): கோவையில் எம்.எஸ்.ஸி பயின்று வரும் மாணவி துப்புரவு பணியாளராக தேர்வாகியிருப்பதில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். கோவை மாநகராட்சியில் 100 வார்டுகள் உள்ளன. இங்கு 2,520 நிரந்தர துப்புரவு தொழிலாளர்கள், 2,308 ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். காலியாக உள்ள 549 துப்புரவு பணியாளர் பணியிடங்களை நிரப்ப மாநகராட்சி சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த வேலைக்காக பி.எஸ்சி., பி.காம்., பி.இ. படித்த பட்டதாரிகள் உள்பட 7,300 பேர் விண்ணப்பித்து இருந்தனர். அவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டனர்….

மேலும்...

அர்ஜுன் சம்பத் மீது எஸ்டிபிஐ போலீசில் புகார்!

கோவை (05 மார்ச் 2020): அவதூறு பரப்பி கலவரத்தை தூண்ட முயல்வதாக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் மீது எஸ்டிபிஐ கட்சியினர் போலீசில் புகார் அளித்துள்ளனர். கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் மாவட்ட செயலாளர் உசேன் தலைமையில் 10-க்கும் மேற்பட்டோர் மனு அளிக்க வந்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:- அமைதி பூங்காவாக உள்ள தமிழகத்தில் அனைத்து மதத்தினரும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறார்கள். இதனை சீர்குலைக்க சிலர் முயற்சி செய்து வருகிறார்கள்….

மேலும்...

கோவையில் மசூதி மீது பெட்ரோல் குண்டு வீச்சு!

கோவை (05 மார்ச் 2020): கோவையில் மசூதி ஒன்றின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கோவை வடக்கு மாவட்ட ஜமாத் மற்றும் அனைத்து இயக்கங்கள் சார்பில் போலீசில் அளிக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:- இன்று (வியாழன்)காலை கணபதி வேதம்பாள் நகர் பகுதியில் உள்ள பள்ளிவாசல் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. அந்த சமயத்தில் அங்கு யாரும் இல்லாததால் எந்தவித உயிர்சேதமோ, காயமோ ஏற்படவில்லை. பள்ளிவாசல் மீது பெட்ரோல் குண்டு வீசியவர்களை விரைந்து கைது…

மேலும்...

கோவையில் பாஜக இந்து முன்னணியினர் இடையே மோதல் – 3 பேருக்கு அரிவாள் வெட்டு!

கோவை (02 மார்ச் 2020): கோவையில் பாஜக, இந்து முன்னணியினர் இடையே ஏற்பட்ட மோதலில் மூவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கோவை கவுண்டம்பாளையம் தீயணைப்பு அலுவலகம் அருகே இரு சக்கர வாகனமும் காரும் மோதிக்கொண்டன. அதையடுத்து இரு சக்கர வாகனத்தில் வந்த பெண்ணுக்கும் காரில் வந்த நபருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த இந்து முன்னணியைச் சேர்ந்த கார்த்திக், ஜெரால்ட், ஹரீஷ் ஆகியோர் கார் ஓட்டி வந்த டிரைவருக்கு ஆதரவாகப்…

மேலும்...

துப்புரவு தொழிலாளிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாஜகவை சேர்ந்தவர் கைது!

கோவை (28 பிப் 2020): கோவையில் துப்புரவு தொழிலாளி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாஜகவை சேர்ந்த ஜோதி என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். கோவை வரதராஜபுரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் பணிபுரியும் துப்புரவு தொழிலாளி பெண், கழிவறையை துப்புரவு செய்துகொண்டிருந்தபோது, அங்கு சென்ற ஜோதி, அந்த பெண்ணுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார். இதனை அடுத்து அந்த பெண் கூச்சலிடவே, பெண்ணை கடுமையாக தாக்கியும் உள்ளார். இதுகுறித்து அந்த பெண் சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்….

மேலும்...

கோவை ஷஹீன் பாக் போராட்டக் களத்தில் பதாகைகளுடன் புதுமண தம்பதிகள்!

கோவை (21 பிப் 2021): கோவை ஆற்றுப் பாலத்தில் நடைபெறும் குடியுரிமை சட்ட எதிர்ப்பு தொடர் போராட்டத்தில் ஒரு திருமணம் நடைபெற்றுள்ளது. குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நாடெங்கும் போராட்டம் வலுப் பெற்றுள்ளது. அதன் ஒரு பகுதியாக டெல்லி ஷஹீன் பாக் மாடல் போராட்டம் தமிழகத்திலும் பல பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் கோவை ஆற்றுப்பாலத்தில் ஷாஹின் பாக் திடலில் நேற்று (20-2-2020, வியாழக்கிழமை) மணமக்கள் அப்துல் கலாம் – ரேஷ்மா ஆகியோர் திருமணம் நடைபெற்றது. மணமக்கள்…

மேலும்...

ஷஹீன் பாக் மாடல் தொடர் போராட்டம் கோவையிலும் தொடங்கியது – வீடியோ!

கோவை (20 பிப் 2020): டெல்லி ஷஹீன் பாக் மாடல் போராட்டம் நாடெங்கும் பரவியுள்ள நிலையில் கோவையிலும் தொடர் போராட்டம் நேற்று முதல் தொடங்கியுள்ளது. குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நாடெங்கும் போராட்டம் வலுபெற்றுள்ள நிலையில், சென்னை வண்ணாரப்பேட்டை டெல்லியைப் போன்று சென்னை ஷஹீன் பாக்காக மாறி இங்கு 7 வது- நாளாக போராட்டம் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தின் பல பகுதிகளிலும் தொடர் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், கோவையிலும் பல்லாயிரக் கணக்காணோர் பங்கேற்று தொடர் போராட்டத்தில்…

மேலும்...

தொடரும் தீண்டாமை கொடுமை – 430 க்கும் அதிகமான தலித்துகள் இஸ்லாம் மதத்திற்கு மாறினர்!

கோவை (12 பிப் 2020): தொடரும் தீண்டாமை கொடுமை காரணமாக கோவையில் 430க்கும் அதிகமான தலித்துகள் இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் சமீபத்தில் பெய்த பலத்த மழையின் காரணமாக, சிக்கதாசம்பாளையம் நடூர் கிராமத்தில் கண்ணப்பன் லே அவுட் பகுதியில் தீண்டாமை சுற்றுச்சுவர் இடிந்தது. இந்த சுற்றுச்சுவர் அருகிலுள்ள அரசு தொகுப்பு வீடுகளின் மேல் விழுந்ததில், அங்கு வாசித்த 10 பெண்கள், 3 ஆண்கள், 2 குழந்தைகள் உள்பட 17 பேர் உயிரிழந்தனர். இறந்த அனைவரும்…

மேலும்...