ஓபிஎஸ் தனது இல்லத்தில் தனியாக ஆதரவாளர்களுடன் ஆலோசனை!

சென்னை (02 அக் 2020): துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களுடன் தனது வீட்டில் தனியாக ஆலோசனை நடத்தியுள்ளார். அ.தி.மு.க.வில் முதல்-அமைச்சர் வேட்பாளர் யார்? என்பதை வரும் 7-ந்தேதி அறிவிக்கப்பட இருப்பதாக கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார். இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் தனது இல்லத்தில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதனால், என்ன முடிவை அவர் அறிவிக்கப்போகிறார் என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில், அனைத்து அதிமுக எம்.எல்.ஏக்களும் வரும் 6ந்தேதி சென்னைக்கு வர…

மேலும்...

அதிமுக தலைமையகத்தில் காரசார விவாதம்!

சென்னை (19 செப் 2020): அதிமுக முதல்வர் வேட்பாளர் யார்? என்பது குறித்து அதிமுக தலைமையகத்தில் காரசார விவாதம் நடைபெற்றுள்ளது. கொரோனா காலத்திலும் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. பரபரப்பான இந்த அரசியல் காலகட்டத்தில் அ.தி.மு.க.வின் அவசர உயர்மட்ட குழு ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று மாலை நடந்தது. அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்- அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமை தாங்கினர்….

மேலும்...

அதை அவர்தான் சொல்லணும் – புள்ளி வைக்கும் பிரேமலதா!

ராமநாதபுரம் (31 ஆக 2020): சட்ட மன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அரசியல் கட்சிகள் பரபரப்பாக இயங்கிக் கொண்டு இருக்கின்றன. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூரில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள பிரேமலதா வந்தார். அப்போது செய்தியாளர்களின் கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், கடந்த கால தேர்தல்களை போல் அல்லாமல் இந்தமுறை தேமுதிகவின் கூட்டணி நிலைப்பாடு பற்றி விரைந்து அறிவிப்போம் எனத் தெரிவித்தார். மேலும் தற்போதைய நிலவரப்படி தேமுதிக தனி போட்டியிட வேண்டும் என்பது தான் தொண்டர்கள்…

மேலும்...

ஓபிஎஸ்ஸின் கருத்தால் அதிமுகவில் சலசலப்பு!

சென்னை (15 ஆக 2020): துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இட்டுள்ள ட்விட்டர் பதிவால் அதிமுகவில் மீண்டும் புகைச்சல் ஆரம்பித்துள்ளது. 2021 சட்டப்பேரவை தேர்தல் வரவுள்ள நிலையில் அதிமுகவில் யார் முதல்வர் வேட்பாளர்? என்ற கேள்வி எழுந்துள்ளது,. ஆனால் இதுகுறித்து ஓ.பி.எஸ் ட்விட்டர் பதிவொன்றை இட்டுள்ளார் அதில், “தாய் வழி வந்த தங்கங்கள் எல்லாம் ஓர்வழி நின்று நேர்வழி சென்றால் நாளை நமதே!!” என்று அந்த ட்விட்டர் பதிவு உள்ளது. தேர்தல் நெருங்கும் நிலையில் இந்த ட்விட்டர்…

மேலும்...

அதிமுக பாஜக இடையே குடுமிப்பிடி சண்டை – நயினார் போகுமிடம் எங்கே?

சென்னை (12 ஆக 2020): சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தில் அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாக இயங்கத் தொடங்கிவிட்டன., பலர் தங்களது கட்சிகளிலிருந்து அடுத்த கட்சிகளுக்கு தாவ தொடங்கிவிட்டனர். அதில் குறிப்பாக அதிமுகவிலிருந்து பாஜகவுக்கு பாய்ந்த நயினார் நாகேந்திரன்தான் இப்போது டைம் லைனில் உள்ளார். இவர் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு நவாஸ் கனியிடம் தோல்வியை சந்தித்தார். மேலும் தமிழக பாஜக தலைவர் பதவியை எதிர் பார்த்து காய் நகர்த்திய நயினாருக்கு அது…

மேலும்...

திமுக ஒப்பந்தமிட்டுள்ள பிரசாந்த் கிஷோர் நிறுவனம் திடீர் மூடல்!

சென்னை (07 ஜூன் 2020): சென்னை, அண்ணா நகரில் உள்ள பிரசாந்த் கிஷோரின் ‘ஐபேக்’ அலுவலகம் திடீரென மூடப்பட்டு உள்ளதாக, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அடுத்த ஆண்டுக்கான சட்டசபை தேர்தல் பணிகளுக்கு திட்டமிட, பிரசாந்த் கிஷோர் நிறுவனத்துடன் தி.மு.க. தலைமை ஒப்பந்தம் செய்தது. பிரசாந்த் தலைமையிலான ‘ஐபேக்’ நிறுவனத்தின் சார்பில் 234 தொகுதிகளுக்கும் ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டு களப்பணி துவக்கப்பட்டுள்ளது. தி.மு.க.,வின் ‘ஒருங்கிணைவோம் வா’ செயல் திட்டத்தால், சில மாவட்ட செயலர்கள் மற்றும் அக்கட்சியின் தகவல்தொழில்நுட்ப அணி நிர்வாகிகள்…

மேலும்...