பஞ்சாபில் பிரதமர் மோடியை வழிமறித்தது பாஜகவினர் – விவசாயிகள் பரபரப்பு தகவல்!

புதுடெல்லி (09 ஜன 2022): பஞ்சாபில் பிரதமர் மோடியை வழிமறித்தது விவசாயிகளல்ல, பாஜகவினர் தான் என்று கிஷான் எக்த மோர்ச்சா தெரிவித்துள்ளது. கடந்த புதன்கிழமை, பல புதிய திட்டங்களைத் தொடங்குவதற்கான பூஜைக்காக, பிரதமர் மோடி பஞ்சாப் சென்றார். மோசமான வானிலை காரணமாக அவர் ஹெலிகாப்டர் பயணத்தைத் தவிர்த்துவிட்டு, சாலை மார்க்கமாகப் பயணத்தைத் தொடர்ந்தார். அப்போது, ஹுசைனிவாலாவிலுள்ள தியாகிகள் நினைவிடத்திலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவிலுள்ள மேம்பாலத்தில் பிரதமர் மோடியின் வாகனம் மறிக்கப்பட்டது. மேம்பாலத்தில் சிலர் சாலைமறியலில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். இதனால்,…

மேலும்...

முஸ்லிம்களுக்கு எதிரான வகுப்புவாத பேச்சு – ஆயுதப் படை தலைவர்கள் பிரதமர் மற்றும் ஜனாதிபதிக்கு கடிதம்!

புதுடெல்லி (01 ஜன 2022): ஹரித்வாரில் முஸ்லிம்களுக்கு எதிராக சமீபத்தில் நடந்த வகுப்புவாத பேச்சுகளைக் கண்டித்து முன்னாள் ஆயுதப்படை தலைவர்கள் பிரதமர் மற்றும் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளனர். இதுகுறித்து எழுதப்பட்டுள்ள அந்த கடிதத்தில் “வெறுப்பின் பொது வெளிப்பாடுகளுடன் வன்முறையைத் தூண்டுவதை நாங்கள் அனுமதிக்க முடியாது, இது உள்நாட்டுப் பாதுகாப்பின் மீறல்களுக்கு வழிவகுக்கும், நமது நாட்டின் சமூக கட்டமைப்பை சீரழித்துவிடும்” என்று முன்னாள் ஆயுதப்படை தலைவர்கள் தெரிவித்துள்ளார்கள். நமது எல்லையில் தற்போது நிலவும் சூழ்நிலையில், தேசத்திற்குள் அமைதி மற்றும்…

மேலும்...

பிரதமர் மோடியின் ட்விட்டர் கணக்கு ஹேக்கிங்!

புதுடெல்லி (12 டிச 2021): சமூகவலைதளங்களில் ஒன்றான ட்விட்டரில், அரசியல் தலைவர்கள் முதல் முக்கிய பிரமுகர்கள் ஆக்டிவாக செயல்பட்டு வருகின்றனர். பிரதமர் மோடியும் ட்விட்டரில் ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார். அவருக்கு இரண்டு ட்விட்டர் கணக்குகள் உள்ளன. ஒன்று, இந்திய பிரதமரின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கமாகும். அது @PMOIndia என்ற கணக்கு. மற்றொன்று பிரதமர் மோடியின் தனிப்பட்ட கணக்கான @narendramodi என்பது. இந் நிலையில்தான் நள்ளிரவில் சில நிமிடங்கள் @narendramodi கணக்கு ஹேக் செய்யப்பட்டது. ஹேக்கர்கள் சிலர் இந்த…

மேலும்...

பிரதமர் மோடி, அமித்ஷா பெயரில் போலி தடுப்பூசி சான்றிதழ் – அதிர்ச்சித் தகவல்!

பாட்னா (08 டிச 2021): பீகார் மாநிலத்தில் உள்ள அர்வால் மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் பல முக்கிய தலைவர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டதாக போலியாக சான்றிதழ் வழங்கியது தெரிய வந்துள்ளது. அந்த போலி தடுப்பூசி பட்டியலில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பிரபல இந்தி நடிகர் அமிதாப் பச்சன், அக்‌ஷய் குமார் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்று இருந்தன. இதை கண்டதும் அதிகாரிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். அர்வால் மாவட்டத்தில் உள்ள…

மேலும்...

மூன்றாவது அணியை ஒருங்கிணைக்கும் மம்தா – காங்கிரஸ் மீது சாடல்!

புதுடெல்லி (02 டிச 2021): காங்கிரஸ் தவிர மூன்றாவது அணியை ஒருங்கிணைக்கும் முயற்சியில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி களமிறங்கியுள்ளார். மேற்கு வங்க இடைத்தேர்தலில் பவானிபூரில் அமோக வெற்றி பெற்ற பிறகு, பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை ஒன்றிணைத்து பரந்த கூட்டணியை அமைப்பதுதான் மம்தா பானர்ஜியின் நடவடிக்கை. ஆனால் தற்போது UPA மாற்றுக் கூட்டணி என்ற நிலைப்பாட்டை மம்தா எடுத்துள்ளார். நேற்று முன் தினம் மகாராஷ்டிரா வந்தடைந்த மம்தா பானர்ஜி, இன்று சரத் பவாரை…

மேலும்...

வேளாண் சட்டம் மீ ண்டும் கொண்டுவரப்படும் – பாஜக எம்பி சாக்‌ஷி மகாராஜ்!

புதுடெல்லி (22 நவ 2021): சர்ச்சைக்குரிய விவசாயச் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, பாஜக எம்பி சாக்ஷி மகராஜ், மீண்டும் சட்டம் கொண்டு வரப்படும் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில். மசோதாக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. தேவைப்பட்டால், அவை மீண்டும் கொண்டு வரப்பட்டு செயல்படுத்தப்படும். என தெரிவித்தார். மேலும். “மோடிஜியின் பெருந்தன்மைக்கு நான் நன்றி கூறுகிறேன். சட்டத்தின் ஆட்சியை விட தேசத்திற்கு அவர் முன்னுரிமை அளித்தார். பாகிஸ்தான் ஜிந்தாபாத் மற்றும் காலிஸ்தான்…

மேலும்...

வேளாண் சட்டம் ரத்து – மோடியின் வாக்குறுதியை விவசாயிகள் நம்பத் தயாரில்லை – ராகுல் காந்தி!

புதுடெல்லி (21 நவ 2021): பிரதமரின் வார்த்தைகளை விவசாயிகள் நம்பத் தயாராக இல்லை என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். விவசாய சட்டங்களை ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் என்று ஐக்கிய கிசான் மோர்ச்சா (எஸ்கேஎம்) அறிவித்ததை அடுத்து ராகுல் காந்தி இவ்வாறு தெரிவித்துள்ளார். இதுகுறித்து ராகுல் காந்தி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், கடந்த கால அனுபவங்கள் விவசாயிகளை வேலைநிறுத்தத்தைத் தொடரத் தூண்டியுள்ளன. நரேந்திர மோடி முன்பு பொய்யான வாக்குறுதிகளை அளித்துள்ளார். மக்கள் இன்னும் அவரின் பொய்யான…

மேலும்...

பாஜக தரப்பில் குறையுள்ளது – யோகி ஆதித்யநாத் பகீர் கருத்து!

லக்னோ (19 நவ 2021): பாஜக தரப்பில் சில குறைபாடுகள் காரணமாக வேளாண் சட்டத்தின் உண்மையான நோக்கங்களை விளக்கத் தவறிவிட்டோம். என்று உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். மூன்று விவசாய சட்டங்களை ரத்து செய்யும் பிரதமரின் முடிவை அடுத்து. இந்த முடிவை வரவேற்றுள்ளஉ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் இதுகுறித்து விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், வேளாண் சட்டத்தின் பலன்களை விவசாயிகள் நம்பவில்லை. “விவசாயிகளுடன் அனைத்து மட்டங்களிலும் பேச்சுவார்த்தை நடத்த முயற்சித்துள்ளோம். ஆனால் எங்கள் தரப்பில் சில குறைபாடுகள்…

மேலும்...

மோடிக்கு எதிராக வெள்ளை மாளிகை முன்பு ஆர்ப்பாட்டம்!

வாஷிங்டன் (25 செப் 2021):  பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்கா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, வெள்ளை மாளிகைக்கு முன்னால் உள்ள பூங்காவான லாஃபாயெட் சதுக்கத்தில் டஜன் கணக்கான இந்திய அமெரிக்கர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசுமுறை பயணமாக பிரதமர் மோடி அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு பல்வேறு தலைவர்களை சந்தித்து மோடி பேச்சுவர்த்தை நடத்தி வருகிறார். இந்நிலையில், மோடிக்கு எதிராக அங்கு போராட்டமும் நடைபெற்றுள்ளது. “இந்தியாவை பாசிசத்திலிருந்து காப்பாற்றுங்கள்” என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி, மனித உரிமை மீறல்கள்,…

மேலும்...

அபுதாபி பட்டத்து இளவரசருடன் பிரதமர் மோடி உரையாடல்!

புதுடெல்லி (03 செப் 2021): அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் மற்றும் பிரதமர் மோடி தொலைபேசி மூலம் உரையாடிக்கொண்டனர். வெள்ளிக்கிழமை அன்று நடந்த இந்த உரையாடலில், இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையேயான உறவுகளைப் பற்றி தலைவர்கள் பேசினர் மற்றும் உறவுகளை வலுப்படுத்துவதற்கான வழிகளைப் பற்றியும் விவாதித்தனர். மேலும் இரு நாடுகளுக்கிடையே பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகள் மற்றும் முதலீட்டு ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது….

மேலும்...